நில வரைபடத்தை வைத்துக் கொண்டு நிலத்தில் உள்ள பாறைகளினை அளவிட்டு அந்த பாறையானது எந்த வகை பாறை என்பதை முதலில் அறிந்து கொண்டு அதன்பிறகு பொருத்தமான தோண்டு தளத்தினை கண்டுபிடிக்கின்றனர். பெரும்பாலும் சுண்ணாம்பு பாறைகள் கொண்ட பகுதிகளில் அதிக அளவு நீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதால் நீரியல் நிபுணர்கள் அந்த இடங்களில் தோண்டுகின்றனர். மிகவும் ஆழத்தில் உள்ள பாறைகளில் தான் நிலத்தடிநீர் பாய்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக நீரியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
அதுமட்டுமல்லாது நீரியல் நிபுணர்கள் நிலத்திற்கு அருகில் ஏற்கனவே உள்ள கிணறுகள் பற்றிய தகவல்களை தேடுவார்கள். ஏனென்றால் அந்த கிணற்றில் எந்த வகை பாறை இருந்தது என்பதை கண்டுபிடித்தால் தற்போது புதிதாக தோண்டப்படும் இடத்தில் தண்ணீர் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கருதுகின்றனர்.
நீரியல் நிபுணர்கள் ஏரியல் (Aerial) புகைப்படங்களை ஆய்வு செய்து அதன் மூலம் பாறைப்படுகைகளை கண்டறிந்து அந்த பகுதியில் கிணறு தோண்டினால் அங்கு அதிகமான நீர் கிடைப்பது தெரியவரும் என்று கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli