கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் என்பது ஒரு வளைந்த குச்சியை எடுத்துக்கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் நடக்கும் போது அந்த குச்சி மேல்நோக்கி வந்தால் நிலத்தடிநீர் உள்ளது என்று அர்த்தம். மற்றொரு முறையான ‘L’ வடிவ கம்பிகள் ஒரு ஜோடி எடுத்துக்கொண்டு அதில் ஊசல் குண்டினை பொருத்தி நிலத்தின் மேற்பரப்பில் எடுத்துச் செல்லும்போது நிலத்தடிநீர் உள்ள பகுதிக்கு செல்லும்போது ஊசல் செங்குத்து நிலையிலிருந்து விலகி நீர் இருக்கும் திசைக்கு திரும்பும் என்று கூறுகின்றனர். இந்த முறையில் நீரூற்றுகளை பார்ப்பதற்கு செலவுகள் மிகவும் குறைவு அதுமட்டுமல்லாது அதிக நேரமும் நமக்கு தேவைப்படாது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப தண்ணீர் கண்டுபிடிப்பு சாதனத்தை காட்டிலும் இயற்கையாகவே நிலத்தடி நீரை கனீதேடலில் மேற்கொள்வது பெரும்பாலும் வெற்றியிலே முடிந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த முறை பெரும்பாலும் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli
.