தற்போது நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அறிவியல் அறிஞர்கள் புதிய வகை வௌவால் ரேடார் தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் மிகத்துல்லியமாக பூமியில் எங்கு நீர் உள்ளது என்பதை காட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அறிவியல் அறிஞர்கள் தற்போது கண்டறிந்த வௌவால் ரேடார் சாதனம் ஓர் ஒலி உணர்வு தொழில்நுட்பம் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த சாதனம் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரின் சலனத்தை தனக்குள் உள்வாங்கி ஒலிபெருக்கி மூலமாக 10 விநாடிகளில் பல 100 மீட்டரில் உள்ள நீர் ஓடையினை கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த சாதனத்தில் ஓர் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் உள்ள நீர் ஓடையின் பகுதிகளை ஒலி அலை மூலம் நமக்கு தெரிவிக்கும். இந்த வௌவால் ரேடார் சாதனம் நீர் நிலைகள் மற்றும் சாக்கடைகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம் மிகக் குறந்த அளவு எடை மற்றும் மலிவான விலை கொண்டதாக இருக்கிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இது வழக்கமாக பொறியாளர்கள் பயன்படுத்தி வரும் சிசிடிவி முறையினை காட்டிலும் மிக விரைவாக தண்ணீரை கண்டுபிடிக்கும் ஆற்றலை கொண்டது. இந்த சாதனத்தை இயக்க ஒரே நபர் இருந்தால் மட்டும் போதும், இதனால் நமக்கு பணம் மற்றும் நேரம் மிச்சமாகும். இந்த வகை சாதனம் தற்போது வடமேற்கு பகுதிகளில் உள்ள Norcott தொழில்நுட்ப நிறுவனங்களில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை சாதனத்தை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய தனி நிறுவனங்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஹாக்கின்ஸ் வழக்கமாக தண்ணீர் நிறுவங்கள் பயன்படுத்தும் சிசிடி சாதனம் அதிக பண செலவு கொண்டதாகவும் பூமியில் தண்ணீரை கண்டுபிடிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வௌவால் ரேடார் சாதனம் மிகக் குறைந்த காலத்தில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறினார்.
இந்த ரேடார் சாதனத்தை கண்டுபிடித்ததற்காக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஹரஸ்சங்கோவிற்கு “society brain mercer award” வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli