Vivasayam | விவசாயம்

கண்டங்கத்திரியின் நன்மைகள்

கண்டங்கத்திரி ஒரு பழங்கால விரும்பத்தக்க தாவரமாகும். பழங்காலத்தில் இதை சமையல் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தினர். கண்டங்கத்திரியின் தாவரவியல் பெயர் சொலானம் சரடென்ஸ் என்பதாகும். இந்த தாவரம் முழுவதும் முட்களால் சூழப்பட்டிருக்கும். இது  எளிதாக கிடைக்கும் ஒரு தாவரம் ஆகும். இதன் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகிறது. கண்டங்கத்திரி முக்கியமாக இருமல், சளி மற்றும் குளிரினால் வரும் காய்ச்சல் போன்ற அனைத்து சுவாச நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

9 (1)

கண்டங்கத்திரியின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு:

கண்டங்கத்திரியில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு அதிகமாக உள்ளது. அதனால் விரும்பத்தகாத பக்க விளைவுகளை திறம்பட குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்டங்கத்திரி இலை மற்றும் பழச்சாறு இரண்டும் பயன்படுத்தப்படுகிறது.

கண்டங்கத்திரியின் பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை:

கண்டங்கத்திரியின் மிகவும் குறிப்பிடதக்க பயன்பாடு பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை தான். இந்த தாவர இலையின் சாறு ஷிகேல்லா டைசெண்ட்ரியா பாக்டீரியா தவிர மற்ற அனைத்து பாக்டீரியங்களுக்கும் எதிராக செயல்படுகிறது. உண்மையில் இது பாக்டீரிய தொற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கண்டங்கத்திரியின் கல்லீரல் பாதுகாப்பு:

கண்டங்கத்திரியின் இலைகள் நச்சுத்தன்மையை நீக்கி கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. இந்த கண்டங்கத்திரி இலையின் சாற்றை முதலில் ஒரு முயலுக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையின் முடிவில் முயலின் கல்லீரலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நிரூபணமாகியிருக்கிறது.

கண்டங்கத்திரியின் பல்லீறு நோய்கள்:

கண்டங்கத்திரியின் விதைகள் பல்லீறு நோய்களை குணப்படுத்தும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. கண்டங்கத்திரி விதைகளை நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலில் சிறிது கடுகு எண்ணெய் விட்டு  ¼ தேக்கரண்டி காய்ந்த விதை போட்டு வறுக்கும் போது வரும் புகையை நோயாளியின் வாயில் ஒரு குழாய் மூலம் செலுத்த வேண்டும். இது போன்று 4 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் 75% நோயாளிகள் குணமடைகின்றனர்.

சளி மற்றும் இருமல் சிகிச்சை:

கண்டங்கத்திரியின் வேர் இருமலுக்கு ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கிறது. கண்டங்கத்திரின் வேரை கஷாயம் வைத்து குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் அனைத்தும் குணமடையும். மேலும் கண்டங்கத்திரியை குழம்பு வைத்தால் அது மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version