தற்போது வட வியட்நாமில் உள்ள தாவர மற்றும் மண் ஆராய்ச்சி கழகம் சிலிக்கான் கற்களை விவசாய நிலத்தில் பயன்படுத்தினால் நெற்பயிரின் தரம் கூடுகிறது என்று ஆய்வு செய்து நிரூபித்துள்ளது. சிலிக்கான் கற்களை மண்ணில் கலப்பதால் சிலிக்கான் டை ஆக்ஸைடு நெல் பயிரின் திசுவில் கலந்து விடுகிறது. இவ்வாறு கலப்பதற்கு phytoliths என்று பெயர். இந்த phytoliths தாவரத்தின் தண்டு பகுதிக்கு அதிகமான ஆற்றலைக் கொடுக்கிறது. இவ்வாறு வலுவான ஆற்றலை தாவரத்திற்கு அளிப்பதால் புயல், மழை, காற்று, பூஞ்சைகள், பூச்சிக்கொல்லிகள் போன்ற எந்தவித பாதிப்பும் தாவரங்களுக்கு ஏற்படுவதில்லை.
சிலிக்கானில் அதிக அளவு கனிமப் பொருள் கலந்துள்ளதால் மண்ணிற்கு அதிக சக்தியினை கொடுக்கிறது. மேலும் இந்த சிலிக்கான் கனிமப் பொருள் காலநிலைக்கு ஏற்றாற்போல் சரியான ஆற்றலினை மண்ணிற்கு அளித்து வருகிறது.
இந்த கனிம பொருள் வியட்நாமில் அதிக வெப்பநிலை இருந்தாலும் மண்ணின் வெப்பத்தை விவசாயம் செய்வதற்கு தகுந்தாற்போல் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதை பற்றி ஆராய்ச்சி பல்வேறு விதத்தில் மேற்கொண்டு பார்த்ததில் சிலிக்கான், மண்ணின் தரத்தை உயர்த்தி நெல் மகசூலினை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிலிக்கான் கனிம பொருளை பயன்படுத்துவதால் நெல் அறுவடை செய்த பிறகு அந்த நெல் வைக்கோலை அப்படியே நிலத்தில் மக்க விட்டால் அது மண்ணிற்கு மிகச்சிறந்த உரமாக சிறிது நாட்களிலே மாறிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சிலிக்கான் ஆற்றல் கொண்ட வைக்கோலினை மறுசுழற்சி செய்து உரமாக பயன்படுத்தினால் வருங்கால பயிர் பருவத்திற்கு மிகச் சிறந்த இயற்கை ஆற்றல் உரமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli