Vivasayam | விவசாயம்

பிளாக் முஸ்லியின் மருத்துவக் குணம் !    

பிளாக்  முஸ்லி தாவரத்தில் நிறைய மூலிகை நன்மைகள் உள்ளன.இந்த தாவரம் இந்தியாவில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமி மற்றும் தக்காண பீடபூமி போன்ற மலைப் பிரதேசங்களில் வளரக்  கூடியவை. இது யுனானி முறையில் பல மருத்துவ பயன்பாட்டிற்கு ஒரு  முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. மூலிகைக்காக இந்த மருந்து மிகவும் அதிகமாக பயன்படுகிறது.

10 (1)

இந்த தாவரத்தினுடைய வேர் தான் மருத்துவ பயன்பாட்டிற்கு அதிகமாக பயன்படுகிறது.

பிளாக் முஸ்லியின் சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்:  

  1. ஆயுர்வேதப் படி : பிளாக் முஸ்லியின் கிழங்கு செரிமாணத்தை அதிகரிக்க செய்ய உதவுகிறது.
  2. சுவாச பிரச்சினைகள்: மூச்சுக்குழாய் அலற்சி, இருமல் மற்றும் ஆஸ்துமா சிகிச்சை போன்ற பிரச்சனைகளுக்கு மற்ற மூலிகைகள்  சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
  3. செரிமான பிரச்சனைகள்: கல்லீரல் அலற்சி சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ள மருந்தாக இருக்கிறது. கல்லீரல் செயல்பாடு நன்றாக நடக்க பிளாக் முஸ்லின் மூலிகை மிகவும் பயன்படுகிறது.
  4. இந்த மூலிகை Irritable Bowel Syndrome (IBS) சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
  5. சிறுநீர் சிக்கலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
  6. தோல் பிரச்சனை: பிளாக் முஸ்லி கிழங்கை தூளாக செய்து தோல் பிரச்சனை உள்ள இடத்தில் தடவ வேண்டும். தோல் நோய்க்கும் இது நல்ல மருந்தாக இருக்கிறது.

http://herbpathy.com/Uses-and-Benefits-of-Black-Musli-Cid1074

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version