நம்மைவிட அளவில் மிகச்சிறியவை (கிட்டதட்ட 10000 மடங்கு சிறியவை). பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. சுமார் 10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன.
எறும்புகள் தனது எடையை விட 2000 மடங்கு அதிகமான எடையை தூக்க வல்லன. எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம். அவை: egg, larva, pupa, adult ஆகும். சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர் வாழும். பிரிட்டானியா ஆய்வுப்படி கருப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.
எறும்புகளுக்கு காது கிடையாது. நடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன. எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும். எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. 1. அதுக்காகவும் 2. ஏனைய எறும்புகளுக்காகவும்.
எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சம் 3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன.
எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது. கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை காலனி என்பார்கள். 2002 – ம் ஆண்டில் பில்லியன் கணக்கான எறும்புகளைக் கொண்ட , சுமார் 5800 கிலோ மீட்டர்கள் நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது. சில எறும்புகள் நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நேரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் தகுதி உடையவை. வட அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார் 5 பில்லியன் அதிக மதிப்பிலான உடைமைகள் சேதமடைந்தன.
எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியவை. மனிதர்களும், எறும்புகளும் மட்டும் தான் விவசாயம் செய்கின்றனர். ஆனால், மனிதன் விவசாயம் செய்வதற்கு முன்பு இருந்தே எறும்புகள் விவசாயம் செய்கின்றன.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli