Skip to content

மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!..

வெட்டிவேர் சமூகம் காக்கும் அற்புதமான தவரமாகும். இதற்கு “குருவேர்” என்று மறுபெயரும் உள்ளது. தாவர வகைகளில் பல்வகையைச் சார்ந்த அற்புதம் நிகழ்த்தும் வெட்டிவேர் ஒரு தனி அதிகாரம் பெற்ற வாசனை புல்லாகும். தீப்பிடித்தாலும், மழை பெய்தாலும் இந்த தாவரத்தினுடைய வேர் உயிருடன் இருந்து நீண்ட காலம் வாழும் திறனுடையது.

இந்த வெட்டிவேர் எல்லா பயிருடனும் கூட்டணி வைத்து, மேடுபள்ளம் நிறைந்த காடு மற்றும் கரடு முரடான பகுதிகளில் கூட கிடுகிடுவென்று வளர்ந்துவிடும் தன்மை கொண்டது.

9(1)

எவ்வித உரமோ, பயிர் பாதுகாப்பு மருந்தோ இதற்கு தேவை இல்லை. தென்னந்தோப்பில் நீரை சேமிக்க உதவும் வெட்டிவேர் வீட்டுத் தோட்டங்களில் கூட வாசனைக்காக வளர்கிறார்கள். வெட்டிவேர் எந்த ஒரு பயிருக்கும் கேடு விளைவிப்பதில்லை.

நீர் பிடிப்புத்திறன் அதிகரித்து மண்ணில் நீண்ட நாள் ஈரம் தாக்குபிடிக்க உதவுவதால் தான் வறட்சிப் பகுதிகளில் இந்த வெட்டிவேர் மகாராணியாக விளங்குகிறது.

8(1)

வெட்டிவேர் சாகுபடியினை சரிவான பகுதிகளில் செய்தால் நீர் அரிப்பு, மண் அரிப்பு மூலம் சேதம் நேராமல் காக்கலாம்.

வெட்டிவேரின் மருத்துவக் குணங்கள்:

  1. வெட்டிவேர் வாசனையை சுவாசிப்பதால் தலைவலி நீங்கும், உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.
  2. வெட்டிவேர் கசாயம் சிக்குன்குனியா காய்ச்சலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
  3. வெட்டிவேரை வேகவைத்து ஆவி பிடித்தால் மலேரியா காய்ச்சல் தீரும்.

 6(1)11

  1. வெட்டிவேரை தண்ணீர் விட்டு அரைத்து பசையாக செய்து கொண்டு பல்வலி, தலைவலி போன்றவற்றுக்கு நிவாரணியாக பயன்படுத்தலாம்.
  2. வெட்டிவேர் பசையாக அரைத்து தீக்காயங்கள், தலைவலி, பாம்பு கடி போன்றவற்றுக்கு பற்றுப் போட்டால் எளிதில் குணமாகும்.
  3. வெட்டிவேர் போட்ட காய்ச்சிய நீரை வாய் கொப்பளித்தால் வாய் புண் ஆறும், கிருமிகள் அழியும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj