அபிவிருத்தி ஆராய்ச்சி, உணவு மற்றும் பொருளாதார வள மையத்தின் இளங்கலை ஆராய்ச்சியாளரான இலியாஸ் சிஸ்நரஸ் “தடுப்பு பட்டியல்” முறை மேற்கொண்டதால் பிரேசிலில் உள்ள மழைக்காடுகள் பெருமளவிற்கு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பிரேசிலில் கடந்த 2008-ம் ஆண்டு மழைக்காடுகளை பாதுகாக்கும் பொருட்டு 771 மாவட்டங்களில் காடுகள் அழிப்பதை தடுக்க தடுப்பு பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு அந்த பட்டியலில் உள்ள காட்டுப் பகுதிகளை அழித்தால் அதற்கு மிகப்பெரிய அபராதமும் சிறை வாசமும் விதிக்கப்படும் என்று அரசு அறிக்கை வெளியிட்டது. இதன் மூலம் தற்போதைய ஆண்டு வரை காடுகள் அழிப்பு தோராயமாக 26% குறைந்துள்ளது. என்று தடுப்பு பட்டியல் அறிக்கை கூறுகிறது.
காடுகளை பாதுகாக்கும் பொருட்டு பிரேசில் அரசு நவீன செயற்கை கோள் கண்காணிப்பு மையம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாது பல தடுப்பு சட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக பிரேசில் அரசு கொண்டு வந்த ”தடுப்பு பட்டியல்” கட்டுப்பாடுகள் பெரிதும் காட்டழிப்பை தடுத்து வருவதாக இலியாஸ் சிஸ் நரஸ் கூறினார். இந்த தடுப்பு பட்டியல் மூலம் 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை மக்களின் கூட்டு முயற்ச்சியால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சி 4000 சதுர கிலோமீட்டர் அளவிற்கு ஜெர்மனி பிளாக் ஃபாரஸ்ட் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள சுமார் 40% பகுதிகளுக்கு பாதுகாப்பை அளித்துள்ளதாக தெரிகிறது என இலியாஸ் சிஸ் நரஸ் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli