செயற்கையாக ரூட் மைக்ரோபையோமி பயன்படுத்தி தாவர வளர்ச்சியினை அதிகரிப்பதற்கு ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டது மிகக் குறைவே. ஆனால் தற்போது டெக்ஸஸ் பல்கழைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கழைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தங்கள் சொந்த ஆய்வகத்தில் தாவரத்தின் வளர்ச்சியினை அதிகப்படுத்தும் மைக்ரோபையோமி வடிவ அர்பியோடாபோசிஸை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த அர்பிடோப்சிஸ் சோதனைகள் பெரிய தாவரங்களின் வேர்களில் இருந்து பாக்டீரியாவை வடிகட்டி பின்னர் அதனை விதை மூலம் வளரும் தாவரத்திற்கு கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த விதை தாவரத்தை உற்று கவனித்த போது மரபணு அந்த தாவரத்திற்கு ஏற்றார்போல் ஒரே மாதிரியாக இயற்கையான மரபணு போலவே இருந்தது எனவும், அதனால் அந்த தாவரம் மிகச்சிறப்பாக வளர்ந்தது எனவும் நிரூபிக்கப்பட்டது.
இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முல்லர் இந்த மைக்ரோபையோமி செயற்கை தாவர வளர்ச்சியினை விரைவில் கீரை, வெள்ளரிக்காய், தக்காளி போன்ற பணப்பயிர்களுக்கும் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த செயற்கை மைக்ரோபையோமி பரிணாம மரபணு வெளிப்புற விவசாயம் மற்றும் தோட்டக்கலை விவசாயத்திற்கு பயன்படுத்தி விவசாயத்தில் புதிய பசுமை புரட்சியினை மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.
மைக்ரோபையோமி சோதனை தந்திரமானதாகவும் மற்றும் புதிய உற்பத்தியினை வெற்றிகரமாக மேற்கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது இச்சோதனையை விலங்குகளுக்கும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மைக்ரோபையோமி சோதனை புல் மற்றும் தேனீக்கள் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.
செயற்கை மைக்ரோபையோமி சோதனை மிகவும் மலிவான நோய்தடுப்பு மருந்தாகவும் தாவரம் மற்றும் விலங்குகளுக்கு பயன்படும் என்று முல்லர் கூறினார்.
முல்லர் இந்த மைக்ரோபையோமியை பயன்படுத்தி ஊசி மூலம் தாவரத்திற்கு தேவையான மரபணுவை செலுத்தி அதன் மூலம் விவசாயத்தை பன்மடங்கு மேம்படுத்த உள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli