Vivasayam | விவசாயம்

தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக மழை பொழிகிறது. அரசு வானிலை மழை ஆய்வாளர்கள் தகவலின் படி பருவ மழை பற்றாக்குறை 13% குறைந்துவிட்டது.

இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) மேலும் தீபகற்ப இந்தியாவில் பருவ மழை பற்றாக்குறை குறையும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

தாமதமான பருவ மழை காரீப் பருவத்தின் போது உணவு உற்பத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மழையானது ராபி பருவத்தில் உணவு தானிய உற்பத்தி உயர்வுக்கு வழிவகுக்கும் என்று வேளாண் அமைச்சகம் கடந்த புதன் கிழமை (23.9.2015) அன்று கூறியுள்ளது.

சில மாநிலங்களில் வறட்சி ஏற்பட பருவ மழை பற்றாக்குறை காரணமாக உள்ளது என்று கடந்த வாரம் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2015-16 ஆண்டில் காரீப் பருவத்தில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 1.78% முதல் 124.05 மில்லியன் டன் வரை வீழ்ச்சியடையும் என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய விவசாய பருவம் காரீப். இந்த பருவத்தில் விவசாயிகள் ஜூன் முதல் செப்டம்பர் பருவ மழையையே மிகவும் சார்ந்திருக்கின்றனர். பருவ மழைபற்றாக் குறையினால் நாட்டின் பெரும்பாலான விளைநிலங்கள் பாதிப்படைகின்றன.

3(1)

கடந்த வாரம் முதல் அதிகமான மழை பொழிந்து வருகிறது. வரும் வாரங்களிலும் மேலும் அதிகமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது காரீப் பருவப் பயிர்கள் முதிர்ச்சி கட்டத்தை தாண்டிவிட்டது. மேலும் காரீப் பயிரை அறுவடை செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த மழையானது மண்ணை ஈரமாக வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் மேலும் இந்த மழை கான்டின்ஜென்ட்(சில்லறை) பயிர்கள், ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பூனாவின் வானிலை ஆய்வு மைய, வானிலையியல் விவசாய பிரிவின் துணை இயக்குனர் N.சட்டோபாத்யாய் கூறினார். மேலும் இவர் இந்த வருட நார் பயிர்கள் மற்றும் கடலை எண்ணெய் உற்பத்தியில் நிறைய பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொண்டனர். அதனால் பருப்பு வகைகள் உற்பத்தி மற்றும் இதர தானியங்கள் உற்பத்தி இயல்பான நிலையில் தான் இருக்கும் என்றும் கூறினார்.

மழை பற்றாக்குறை வாரங்களை விட கடந்த வாரம் பெய்த மழை 68% அதிகமாக பெய்து முழு நாட்டையும் பருவ மழை பற்றாக் குறையிலிருந்து மீட்டது.

உத்திரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா போன்ற இடங்களில் இந்த பருவத்தில் குறைந்த மழை பெய்துள்ளது. வெப்ப மண்டல இந்திய வானிலை நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவில் சில இடங்களில் சாதரண மழையும், மீதமுள்ள சில இடங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது. இதுவரை, நாட்டின் 58% பகுதிகள் சாதாரண மழை பொழிவையும் மற்றும் 36% பகுதிகள் குறைந்த மழை பொழிவையும் பெற்றுள்ளது.

மழை பற்றாக்குறை காரணமாக, கடந்த வாரத்தில் பெய்த மழையினால் நாடு முழுவதிலும் உள்ள மழை பற்றாக்குறையில் ஒரு பெரிய இடைவெளியை குறைத்துள்ளது. தற்போது செப்டம்பர் 12 ஆம் தேதியின் கணக்கெடுப்பின் படி மழை பற்றாக்குறை அளவு 16% ல் இருந்து 13% ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் வங்காள விரிகுடாவில் கடந்த சில நாட்களில் நிகழ்ந்த மாற்றமே என்று பல வானிலை ஆய்வு மையங்கள் கூறுவதாக Skymet வானிலை சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் வியாழக்கிழமை(24.9.2015) அன்று கூறியுள்ளது.

 மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version