கொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும். இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை . இந்த தாவரத்தினுடைய இலைகள் இறகு வடிவம் கொண்டது. இந்த தாவரத்தினுடைய இலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ நீளமும், 4 – 9 செமீ அகலமும் கொண்டவை.
வெப்பமண்டலம் மற்றும் குறைந்த வெப்பமண்டல பகுதியில் வளரக்கூடியது. இந்த தாவரத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் அடங்கி இருக்கின்றன.
கொன்றை தாவத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
- இந்த தாவரத்தின் பழத்தில் சோடியம் குறைவாக உள்ளது.
- 100 கிராம் பழத்தில் வைட்டமின் கே தேவையை 100% வழங்குகிறது.
- 100 கிராம் உலர்ந்த பழத்தில் 800 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
- ஆற்றல் அதிகமாக இருக்கிறது.
கொன்றை தாவரத்தின் மருத்துவ குணங்கள்:
இந்த தாவரத்தில் உள்ள பட்டை, வேர், பூக்கள், இலைகள், பழம் போன்ற அனைத்தும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது.
- கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும்.
- நீரிழிவு, கட்டி, கொழுப்பு குறைப்பது, பேதி, அழற்சி, ஆண்டியாக்ஸிடண்ட், பாக்டீரியா, வைரஸ், குடல் புண் போன்றவற்றுக்கு இந்த தாவரம் மிகவும் உதவியாக இருக்கிறது.
- காய்ச்சல், தொண்டை புண் , வீக்கம், ஆஸ்துமா போன்ற அறிகுறிகளுக்கு கொன்றை தாவரம் மிகவும் உதவியாக இருக்கிறது.
- இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
- அரிப்பு, வீக்கம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
http://rajanjolly.hubpages.com/hub/The-Indian-Medicinal-Plant-Amaltas-Or-Cassia-Fistula
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli