கொத்தமல்லி விதையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் கொத்தமல்லி விதையை சளி, ஃப்ளூ, செரிமானம், கீழ்வாதம் , கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தினர்.
கொத்தமல்லி விதை கொசுக்களை விரட்டவும் உபயோகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொத்தமல்லி இலை மெலிதாகவும் 2 முதல் 3 அடி உயரம் வளரும். இந்த பூக்களில் காணப்படும் கொத்தமல்லி விதை மிகவும் சிறியதாக இருக்கும் . இந்த கொத்தமல்லி விதையில் லினோலிக் அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது.
கொத்தமல்லி விதையின் நன்மைகள்:
- கீழ்வாதம் வராமல் தடுக்கிறது.
- தசை பிடிப்பு குறைக்கிறது
- நரம்பு தளர்ச்சியை கட்டுபடுத்துகிறது.
- வீக்கத்தை குறைக்கிறது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli