Vivasayam | விவசாயம்

பர்ஸ்லேன் தாவரத்தின் நன்மைகள்!

பர்ஸ்லேன் இலைகள்  மென்மையானதாகவும் , சதைப்பற்றுள்ள தாகவும் இருக்கிறது . பர்ஸ்லேன்  தாவரத்தின் இலையில் அதிகமாக  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது.  பர்ஸ்லேன் தாவரத்தை  காய்கறி போன்று ஆசிய, ஐரோப்பிய பகுதிகளில்  அதிகமாக வளர்க்கிறார்கள்.

இந்த தாவரத்தின் இலைகள் சற்று புளிப்பு மற்றும் உப்பு சுவை கொண்டதாக இருக்கும். இலைகள் மற்றும் தண்டுகள் சமைக்க பயன்படுகிறது. அதன் மஞ்சள் பூ மொட்டுக்கள் சாலெடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.  பர்ஸ்லேன் விதைகள், கருப்பு  துகள்களாக இருக்கும் . பெரும்பாலும் இந்த தாவரத்தின் விதைகளை மூலிகை பானங்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

19

பர்ஸ்லேன் தாவரத்தின் மூலிகை நன்மைகள்:

  • பர்ஸ்லேன் தாவர இலையில் கொழுப்பு மற்றும் கலோரி மிகக் குறைவாக இருக்கிறது. இந்த இலையில்  நார்ச்சத்து, வைட்டமின்கள், மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன.
  • மீனில் உள்ள சத்தைப் போன்று இந்த இலையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது.

  • 100 கிராம் பர்ஸ்லேன் இலைகளில் 350 மிகி ஆல்பா-லினோலெனிக் அமிலம் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கூறியுள்ளனர்.
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள இந்த இலையை உட்கொள்வதால்  இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் மற்றும், ADHD வளர்சியை தடுக்க மிகவும் உதவியாக இருக்கிறது.
  • இந்த இலையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version