Vivasayam | விவசாயம்

G4 DNA சோளத்தில்  

ப்ளோரிடா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு தேவையான ஜீன்களை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆய்வு அறிக்கையை அளித்துள்ளனர்.

உயிரியல் பிரிவின் உதவி பேராசிரியரான எலிசபத் ஸ்ரோப் மற்றும் அவருடன் பணிபுரியும் ஹான்க் பாஸ் ஆகியோர் மூலக்கூறு உயிரி இயற்பியலில் பயின்று வரும் மாணவரான மைக்கேலோ கோபைலோவுடன் சேர்ந்து புதிய உயிரிவேதியலை பற்றி ஆய்வு அறிக்கையை தயார் செய்தனர். அந்த ஆய்வு அறிக்கையில் புரதம் எப்படி தாவரம் மற்றும் விலங்கு மூலம் குறிப்பிட்ட DNA வை உருவாக்குகிறது என்பதை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த DNA அமைப்பிற்கு பெயர் G-quadruplexes அல்லது  G4 DNA ஆகும்.

அதுமட்டுமல்லாது அவர்கள் தற்காலத்தில் உள்ள ஜீன்கள் எப்படி தாவரங்களில் வேலை செய்யும் என்பது பற்றியும் , வறட்சி அல்லது பெரும் மழைக்காலங்களில் அதனுடைய ஜீன் எப்படி வேலை செய்யும் என்பது பற்றியும் அறிக்கையை  வெளியிட்டது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் மட்டும் தான் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றத்தால் பாதிப்படையாமல் மீண்டு வருகின்றனர். ஆனால் தாவரத்தினால் அவ்வாறு செயல்பட முடிவதில்லை என்று கோபைலோ கூறினார். ஆனால் தற்போது அவர்கள் கண்டுபிடித்த புரதம் மூலம் இந்த பாதிப்பிலிருந்து  விடுப்பட்டு தாவர ஜீன்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய பணியை தொடர உதவியாக இருக்கும்.

மனித உடலில் உள்ள புரதத்தில்  நூற்றுக்கணக்கான ஜீன்கள் உள்ளது. இது ஒரு முறை ஜீன்களை உருவாக்கினால் அது மனித இதயத்திற்கும் , உடல் நல வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு அறிவியல் அறிஞர்கள் ஏன் தாவரத்திற்கு மட்டும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது? என்பதை ஆராய்ந்தனர்.

இந்த ஜீன்களை எப்படி தாவரங்கள் மற்றும் விலங்குகளில் கண்டுபிடிப்பது மிகவும் ஆச்சரியமான செய்தியாக உள்ளது என்று ஸ்ரோப்  கூறினார்.

6 (1)

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புரதத்தின் மூலமாக பார்த்தால்   G4 DNA உறுப்புக்கள் சோளத்தில்  தான்  ஆயிரக்கணக்கில்  இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இதனால் தாவரத்திற்கு எந்த காலக்கட்டத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version