Skip to content

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு வருவதில்லை என்று கூறப்பட்டது. ஏன் அந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது இன்று வரை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட முடியவில்லை.

இதனை நிரூபிக்க பேராசிரியர் பார்ட் லேம்ரிச்ட் ஓர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில் பண்ணையில் கால்நடைகள் அளிக்கும் சாணம் மற்றும் அதனுடைய சிறுநீரில் நோய் எதிர்ப்பு சத்துகள் அதிகமாக இருப்பதால். அந்த பண்ணையிலிருந்து வரும் தூசியானது மனிதன் உடலில் பட்டால் அது மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலிற்கு தருகிறது என்று கூறினார்.

22

பண்ணையில் உள்ள தூசுக்கள் நம் உடலில் பட்டால் உடனே நம் மூக்கில் உள்ள தேவையில்லாத சளித்துளிகள் உடனடியாக வெளிவந்து விடுகிறது. ஏனென்றால் பண்ணையில் உள்ள தூசுவில் A20 புரதம் அதிகமாக இருப்பதால் இது நுரையீரலில் உள்ள சளி சவ்வினை வெளி கொணர்ந்து விடுகிறது. இதனால் நம் உடலில் உள்ள அலர்ஜி, அஸ்துமா தொல்லை முழுவதும் குணமடையை வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பேராசிரியர் பார்ட்லேம்ரிச்ட் கூறினார்.

இந்த ஆராய்ச்சி எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் விதமாக உள்ளது. இந்த ஆய்வின் மூலம் பண்ணை மண்ணிலிருந்துவரும் தூசி மனித உடலினை பாதுகாக்கும் ஒரு வகை தடுப்பு மருந்தாக இருக்கலாம் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஹம்மத் நாங்கள் ஏற்கனவே கண்டறிந்த ஆய்வுகளில் பண்ணை தூசி நிச்சயமாக ஒரு ஆஸ்துமா மற்றும் அலர்ஜிக்கு தடுப்பூசியாக செயல்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தூசி மருந்தாக நோயாளிகளுக்கு கிடைக்கும் முன்னர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj