திருநீற்றுப்பச்சை விதையை சாப்ஜா விதை , அரபு ஃபலோடா விதை, துளசி என்றும் அழைக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து இனிப்பு பானங்களுக்கும் இந்த திருநீற்றுப்பச்சை விதையை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
திருநீற்றுப்பச்சை விதையை இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த விதையை சீன மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
சுகாதார நன்மைகள்:
- திருநீற்றுப்பச்சை விதை மிகவும் குளிர்ச்சியானது. அதனால் தான் இந்த விதையை குளிர்பானங்களில் சேர்க்கிறார்கள்.
- சளி, சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த விதை மிகவும் நன்மை அளிக்க கூடியதாக இருக்கிறது.
- செரிமானம் சீரான முறையில் நிகழ்வதற்கு இந்த விதை பயனுள்ளதாக இருக்கிறது.
- மன அழுத்தத்தை குறைக்கிறது.
- தோல் நோயிற்கு நல்ல மருந்தாக இந்த விதை இருக்கிறது.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
திருநீற்றுப்பச்சை விதையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள்:
- Eugenol, citronellol, linalool, limonene, citral and terpineol போன்ற எண்ணெய்கள் திருநீற்றுப்பச்சை இலையில் காணப்படுகிறது. இந்த எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புக்கு நன்மை அளிக்க கூடியதாக விளங்குகிறது.
- இந்த விதையில் கலோரி மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது.
- பீட்டா கரோட்டின், லுடீன், ஸீக்ஸாக்தைன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது.
- பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், கால்சியம் மற்றும் மக்னீசியம், மற்றும் வைட்டமின் சி போன்ற கனிமங்கள் சரியான அளவை கொண்டுள்ளது.
- இந்த விதையில் இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli