Vivasayam | விவசாயம்

உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி   ( இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி உபயோகம் படுத்தாமல்) விவசாயத்தை  மேம்படுத்துவது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் அதிக புரத சத்து அடங்கிய உடலிற்கு ஆற்றல் தருபவையாக இருக்கும்.

இந்த விவசாய முறை பச்சை இலைகளை  உரமாக பயன்படுத்தியும் மற்றும் மண்ணின் தரத்திற்கு ஏற்ப சிறந்த பயிரினை  வளர்ப்பதற்கு   ஊக்கியாக செயல்படுகிறது.  இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் எந்தவித உடல் பாதிப்பும் ஏற்படுத்தாது. இதில் அனைத்து வகையான  விட்டமின்  சத்துக்களும்  அடங்கியுள்ளது.

11

இந்தியா ஒரு சிறந்த உயிரி உற்பத்தியை   அடிப்படையாக கொண்டு  மிக தரமான உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய விவசாய காலநிலையை கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. நம் நாட்டின்  பல்வேறு பகுதிகளில் கரிம பொருட்களை பயன்படுத்தி உணவை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த உயிரி முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி சந்தைகளிலும் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது.

தற்போது வரை உயிரி மூலம் விவசாயத்தை மேற்கொள்ளும் உலக நாடுகளில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது. இந்த உயிரி விவசாய முறையானது  15%  இயற்கை விவசாயத்திற்கு என அங்கீகரிக்கபட்ட பகுதி அத்துடன் 0.7 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலும் ,  85% காடுகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு உயிரி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட உயிரி உற்பத்தி இடங்கள் 4.72 மில்லியன் ஹெக்டர் (2013 – 2014 ) வரை ஆகும். இந்திய அரசாங்கம்  கரிம உற்பத்தியை மேம்படுத்த  National Programme for Organic Production (NPOP) என்ற அமைப்பை   செயல்படுத்தி உள்ளது.

இந்த தேசிய அமைப்பின் முக்கிய பணி இயற்கை  மூலங்களைப் பயன்படுத்தி கரிமம் உற்பத்தி செய்பவர்களுக்கு அங்கிகாரம் வழங்குவது, தரமான உயிரி  உற்பத்தி , உயிரி  உற்பத்தி செய்யும் பண்ணைகளை அதிகப்படுத்துவது. இந்த  National Programme for Organic Production (NPOP)  அமைப்பு  ஜரோப்பா அமைப்பு மற்றும்  சுவிட்சர்லாந்து கரிம அமைப்பு போன்று தரமான ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

United State Department Of Agriculture (USDA)  இந்தியாவில் உருவாக்கப்பட்ட National Programme for Organic Production (NPOP)  – விற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரமானது நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயிரி உரங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உதவியாக இருந்து வருகிறது.

உயிர் எரிப்பொருளை பயன்படுத்தி உற்பத்தி செய்வது :

இந்தியாவில் மொத்தமாக 1.2 மில்லியன் MT உயிரி உற்பத்தி நிலையங்களிலிருந்து பல்வேறு வகையான உணவு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் etc….. கிட்டதட்ட நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உயிரி  முறையை பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக நம் நாட்டில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகமாக உயிரி உற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உபயோகப்படுத்துகிறது.

உயிரியை  பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தல்:

இந்தியா 135 பொருட்களை கடந்த வருடம் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் அதிகமாக உயிர் உரத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பொருள் துணி ஆகும். இந்த உயிரியை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வதன் மூலம் organic textiles – ல் பதிவு 7.73 % சென்ற வருடத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த உயிரி  பொருட்கள் கிட்டதட்ட அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version