Vivasayam | விவசாயம்

விவசாயத்தால் சுகாதாரத்திற்கு பாதிப்பா!!?

இன்றைய சூழ்நிலையில் சுகாதாரம், ஊட்டச்சத்து, உணவு உற்பத்தி போன்றவை மனித உடல் நிலையை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று AKST (Agricultural Knowledge Science and Technology)  அமைப்பு கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் மற்றும் AKST அமைப்பு உற்பத்தியை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், அதிக ஆற்றல் தரக்கூடிய உணவு பொருட்களை உற்பத்தி செய்வதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏனென்றால் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவால் மட்டுமே மனிதனுக்கு ஏற்படும் பல தரப்பட்ட நோய்களை குணப்படுத்த முடியும். இன்றைய சூழ்நிலையில் உலக அளவில் 15% நோய்க்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடே ஆகும். புரத சத்து மற்றும் உடலிற்கு நன்மை தரும் வைட்டமின்கள் இருக்கும் உணவுவகை கிடைப்பது பெரும் சவாலாக அனைத்து நாடுகளிலும் இருந்து வருகிறது. இந்த சவால்களை நிவர்த்தி செய்ய உலக சுகாதார பாதுகாப்பு அமைப்பானது உணவு பாதுகாப்பு சார்ந்த கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, உணவு உற்பத்தி,பாதுகாப்பு, சுத்திகரிப்பு, பகிர்ந்தளிப்பு முறை போன்றவற்றை மேம்படுத்தலாம்.

AKST ன் முக்கிய நோக்கம் புதிய முறையில் உணவு உற்பத்தி மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பான முறையில் பதப்படுத்துதல் ஆகும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள உணவினை உற்பத்தி செய்வதால் மட்டுமே உலக அளவில் மனிதனின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சரியான பாதுகாப்பற்ற உணவு கொள்கையே காரணம் ஆகும்.

உலக அளவில் உணவு விநியோகம், பதப்படுத்துதல், நுகர்வோர் விழிப்புணர்வு, தேசிய உணவு பாதுகாப்பு, போன்றவற்றை மேற்கொள்ள AKST அமைப்பானது பல்வேறு வழிமுறைகளை அளித்து வருகிறது.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 170000 க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தொழிலை மேற்கொள்வதால் இறந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை தேசிய விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இயந்திரங்களை பயன்படுத்துவதால் காயங்கள் ஏற்படும். இதில் பெரும்பாலும் கிராமப் பகுதியில் உள்ள மக்களே அதிக பாதிப்பிற்குள்ளாகிறார்கள். மற்றொரு முக்கியமான காரணம் இரசாயனம் கலந்த மருந்துகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் விலங்குகளுக்கு நோய் ஏற்பட்டால் அந்த பாதிப்பும் மக்களையே சென்றடைகிறது.

2

இதற்கு காரணம் அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.

மேற்கூறிய பிரச்சனைகளிலிருந்து விவசாயிகள் விடுபட சுகாதார அமைப்பு மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் மூலம்  விழிப்புணர்வை மேற்கொள்ளலாம்..

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

Exit mobile version