ஒரு நிறுவனத்தின் முதலாளி, மேலாளர் மற்றும் பணியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளினை விற்பனை செய்ய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
குறிப்பாக ஆப்-லைன் விற்பனையாளர்கள் தங்களுடைய பொருள்களை விற்பனை செய்யும் பொழுது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சவால்களை சந்தித்தாலும் அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை லாபம் ஈட்டும் வகையில் விற்க முடிவதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் நிறைய வாடிக்கையாளார்களின் தொடர்பு இல்லாததே. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரே தீர்வு நேரடி விற்பனையே (Online) ஆகும்.
ஆன் – லைன் மூலம் பொருட்கள் விற்கப்பட்டால் எப்படி கூடுதல் லாபம் கிடைக்கும் என்பது பற்றி கீழே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1. அதிக முதலீடு செய்து துவங்கப்படும் வியாபாரம் ஏன் குறைந்த வளர்ச்சிக்கான இலாபத்தை அளிக்கிறது ?
உதாரணமாக நீங்கள் ஒரு அரிசி விற்பனையாளராக இருக்கீறிர்கள் என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் தரமான பொருட்களை கொண்டு கடினமாக உழைத்து அரிசியை தயார் செய்தாலும் அதனை விற்பனை செய்ய விற்பனை தளம் அவசியம். அதற்காக நீங்கள் ஒரு கடையை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதற்க்கு முன் பணம், கடையினை அலங்கரிக்க ஆகும் செலவு, கடையினை பார்த்துக் கொள்ள பணியாளர் போன்றவைகளுக்கு ஒதுக்கும் செலவைக் என எல்லாவற்றிலும் செலவு கூடுவதால் அரிசி விற்பதில் கிடைக்கும் இலாபம் குறைவாகவே இருக்கும்.
இதனை நிவர்த்தி செய்ய உகந்தது ஆன் – லைன் வியாபாரமே சிறந்தது ஆகும். இது எப்படி சாத்தியம் என்பது இப்போது பார்ப்போம்.
நீங்கள் ஆன் – லைனில் வியாபாரத்தை தொடங்க குறைந்த வகையிலும் பணம் செலவிடவேண்டியிருக்கும். ஏனெனில் (Snapdeal) போன்ற ஆன் –லைன் விற்பனைத் தளங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எப்படி பொருளினை விற்பனை செய்வது என்று இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக நாம் பதிவு கட்டணம் கூட செலுத்த தேவை இல்லை. ஒரு முறை நீங்கள் உறுப்பினராக சேர்ந்து விட்டால் புதிதாக உற்பத்தி செய்யும் பொருட்களை எளிமையான முறையில் விற்பனை செய்து வியாபாரிகளுக்கு எளிதாக இலாபத்தை ஈட்டி தருகிறது. ஏனென்றால் ஆன் – லைன் விற்பனைத் தளம் வியாபாரிகள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாகவே அவர்களிடம் தொடர்பு கொண்டு பொருட்களை பெற்று விற்பனை செய்கிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கும் அலைய வேண்டிய தேவை இல்லை.
2. குறைந்த நேரத்தில் பொருட்களை வாங்கும் காலம்
இன்றைய விறு விறுப்பான கால கட்டத்தில் மக்கள் அதி வேகமான வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பணிக்கு செல்லும் கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பத்திற்க்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் நேரம் அதிகாலை மற்றும் இரவு மட்டுமே. அப்படியே அவர்கள் அந்த நேரத்தில் பொருட்கள் வாங்க சென்றாலும் கடை திறந்து இருக்காது. இதனால் கடைக்காரர்களுக்கு அதிகமான வடிக்கையாளர்கள் வருவதில்லை. இதனால் அவர்கள் சரியான இலாபம் ஈட்ட முடிவதில்லை.
இதனை நிவர்த்தி செய்ய எந்த நேரத்திலும், எங்கும் பொருட்களை வாங்குவதற்க்கு ஒரு (Smart Phone) வைத்திருந்தால் போதும். மிக எளிதாக அவர்கள் விரும்பும் பொருட்கள் வீட்டிற்கே வந்து சேரும் வசதியை ஆன் – லைன் வியாபார தளம் உருவாக்கி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நேரம் மிச்சமாகும். அது மட்டும் அல்லாது விற்பனையாளர்கள் தங்களுடைய பொருளினை விற்பனை செய்ய எளிதாக உள்ளது.
3. பொருட்களை பாதுகாக்க இடம்
பொருட்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்யும் காலம் வரை அவற்றை பாதுகாக்க கண்டிப்பாக பாதுகாப்பு அறை அவசியம். இவ்வாறு பொருட்களை நீண்ட காலம் பாதுகாக்கும் பொழுது நிறைய சேதாரம் ஏற்படும். அது மட்டும் இல்லாது அறையை பாதுகாக்க பணியாள் நியமிக்க வேண்டும். மின்சார செலவு போன்றவையினால் அதிக செலவு உற்பத்தியாளர்களுக்கு ஆகும்.
4. உற்பத்திக்கும், விற்பனைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்தல்.
பொருட்களை பராமரிப்பதன் மூலம் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய உற்பத்தியாளர்களுக்கு ஆகும் செலவினை குறைப்பதற்க்கு மிகச் சிறந்த வழி ஆன் – லைன் விற்பனையே ஆகும். ஏனெனில் இங்கு பொருட்கள் நேரடியாக உற்பத்தியளார்களிடமிருந்து பெற்று வடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
5. உற்பத்தியாளர்களின் (ஆப் – லைன்) விற்பனை குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. ஒரு பொருளினை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், தன்னுடைய பொருளினை விற்பனை செய்ய அந்த பகுதியை சுற்றியுள்ள மக்களையே நம்பி உள்ளார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய விற்பனையை அதிகப்படுத்த முடிவதில்லை. விற்பனை அதிகம் ஆகவில்லை என்றால் அவர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டமே வந்து சேரும். இந்த மிகப் பெரிய குறையை நிவர்த்தி செய்ய (Snapdeal) போன்ற ஆன் – லைன் விற்பனை நிலையத்தை உற்பத்தியாளர்கள் நாடினால் அவர்களுக்கு உலக முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களின் தொடர்பு எளிதில் கிடைக்கும் இதனால் அவர்களுக்கு நிறைய இலாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
6. முதன்மையான வியாபாரத்தளமாகவும் அதிக அளவில் பொருட்களை வைத்திருக்கும் வணிபத்தளமாகவும் (Snapdeal on line) உள்ளது.
தற்போது வரை இந்த ஆன் – லைன் வியாபாரத் தளத்தில் கோடிக்கணக்கான வடிக்கையாளார்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். இந்த விற்பனைத் தளத்தில் பல்வேறு வகையான தரமான பொருட்களும் நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இணையவழி விற்பனை செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு விவசாயம் தளம், உதவிட தயாராக உள்ளது. சரியாக இரண்டு வாரப் பயிற்ச்சியில் உங்களுக்கென செந்தமாக இணையக் கடையை துவங்கிடலாம்.
தொடர்புக்கு : 73589-33747 , editor.vivasayam@gmail.com