Vivasayam | விவசாயம்

மக்காச் சோள தோலில் துணி

நாம் பொதுவாக மக்காச் சோளத்தில் உள்ள கொட்டைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு மேல் உள்ள தோலை கீழே போட்டு விடுவோம். ஆனால் அவ்வாறு போடப்பட்ட கழிவிலிருந்து துணி தயாரிக்கலாம் என்று   நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

5(1)

நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் குழு இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். உலகில் இயற்கையாக கிடைக்க கூடிய பருத்தி மற்றும் ஆட்டுரோமத்திலிருந்து தான் துணையை தயாரிக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த வகையில் இந்த மக்காச் சோளமும் சேர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படி மக்காச் சோள தோலில் இருந்து துணியை தயாரிக்கிறார்கள் என்று சமீபத்தில் அந்த குழுவில் உள்ளவர்கள் விவரிக்கிறார்கள். மக்காச் சோள தோலில் இருந்து லிங்கோசெல்லுலோஸ் நாரை எடுத்து ஊற வைக்க வேண்டும். பின்பு அதிலிருந்து வரும் நூலை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நூலில் இருந்து துணியை தயாரிக்கலாம் என்று நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள வடிவமைப்பாளர்கள் குழு கூறுகிறது.

ஒரு வருடத்திற்கு 400 மில்லியன் டன் மக்காச் சோள தோல்கள் வீணாகுகிறது. அப்படி வீணாகும் தோலை சந்தையிலும் விற்க முடியாது. அதனால் அந்த தோல்கள் எதுக்கும் பயன் இல்லாமல் வீணாகத்தான் போகிறது. இவ்வாறு வீணாகும் தோலை பயனுள்ள ஆடைகளாக நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் குழு மாற்றுகின்றனர் . இதனால் விவசாய கழிவு ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version