கும்ரியாவைச் சார்ந்த காகித உற்பத்தியாளர் ஜேம்ஸ் க்ராப்பர் கோகோ தோலில் இருந்து காகிதம் செய்யும் செயல்முறையை உருவாக்கியுள்ளார்.
சாக்லேட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த கோகோ தோலை பயன்படுத்தி காகிதத்தை தயாரிக்கலாம் என்று ஜேம்ஸ் க்ராப்பர் கூறுகிறார். கோகோ தோலில் பத்து சதவிதம் செல்லுலோஸ் நார் அடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தியே காகிதத்தை தயாரிக்கிறார்கள். இந்த கோகோ தோல் காகிதம் தயாரிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் 3.5 மில்லியன் டன் கோகோவை உற்பத்தி செய்கிறார்கள் . சாக்லேட் நிறுவனத்தில் கோகோவை மட்டும் எடுத்துக் கொண்டு தோலை நீக்கிவிடுகிறார்கள். சாக்லேட் நிறுவனத்திடம் இருந்து காகித உற்பத்தியாளர் கோகோ தோலை வாங்கி பயனுள்ள காகிதமாக மாற்றுகிறார்கள்.
அதனால் அந்த தோல் வீணாகமல் பயனுள்ளதாக மாறுகிறது. எந்த செயற்கையான ரசாயணமும் சேர்க்காமல் அந்த கோகோ தோலின் நிறத்திலேயே காகிதம் தயாரிக்கிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli