கிளீவ்லண்ட்டில் உள்ள குட்இயர் என்ற டயர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை சார்ந்த உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனம் நெல் உமியில் இருந்து டயரை உருவாக்கியுள்ளது.
விவசாயிகள் ஓரு வருடத்திற்கு 700 மில்லியன் டன் நெல்லை அறுவடை செய்கிறார்கள். நெல்லில் இருந்து நிறைய நெல் உமி கழிவுகள் வெளிவருகிறது. அந்த நெல் உமி கழிவுகளை ஆற்றலுக்காக எரிக்கிறார்கள். பிறகு அந்த உமியில் மிஞ்சுவது சாம்பல் தான். இவ்வாறு எரிக்கப்பட்ட சாம்பலை குட்இயர் நிறுவனம் வாங்கி அதை சிலிகாவாக மாற்றி டயர் செய்கிறார்கள்.
புலாண்டியன், சீனா போன்ற டயர் நிறுவனங்களும் நெல் உமி சாம்பலை வாங்கி டயரை தயாரிக்கிறார்கள். மணலில் இருந்து எடுக்கப்படும் சிலிக்காவை சுமார் 2,500 டிகிரி பாரன்ஹீட் டில் எரிக்கப்பட வேண்டும். ஆனால் நெல் உமியில் இருந்து எடுக்கப்படும் சாம்பலை சிலிக்காவாக மாற்ற 212 டிகிரி பாரன்ஹீட்டில் தான் எரிக்கப்பட வேண்டும் .
அதனால் இது பொருளாதாரத்துக்கு மிகவும் நன்மை உடையதாக இருக்கும் என்று சாவ்லா கூறுகிறார். இதனால் விவசாய கழிவு அதிகமாக ஏற்படுவதை தடுக்கலாம். இதன் மூலம் நம் சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli