காகித கழிவில் இருந்து செங்கல் : ஜெயினில் உள்ள ஸ்பென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காகித கழிவிலிருந்து செங்கல்லை உருவாக்கினர். இந்த செங்கல் மலிவானதாகவும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும். இந்த செயல்முறையானது காகித ஆலையிலிருந்து நிலத்திற்கு திரும்புகிறது.
மற்ற வகை செங்கல் செய்வதை ஓப்பிட்டு பார்க்கும் போது காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லை தயாரிப்பது மிகவும் எளிது. இந்த செங்கல்லை மிக குறைவான நேரத்திலேயே செய்து முடிக்கலாம். காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லால் பணத்தையும், ஆற்றலையும் சேமிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காகித ஆலைகளில் இருந்து வரும் கழிவு பொருள்கள் , கழிவு நீர் சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது விட்டு செல்லப்பட்ட கசடுகள், இந்த இரண்டு கழிவுகளையும் களிமண்ணில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கட்டிடம் கட்டுவதற்கான ஒரு பெரிய துண்டு அழுத்தப்பட்டு வெளியே தள்ளுகிறது. பிறகு அந்த பெரிய துண்டுகளை செங்கல் வடிவில் வெட்டுகின்றனர்.
வெட்டி முடித்த பிறகு அந்த செங்கல்லை எரிக்க வேண்டும். அந்த செங்கல் வெப்பமாவதற்கு குறைந்த நேரத்தையே எடுத்துக்கொள்ளும். 3x1x6 செ காகித செங்கற்கள் குறைவாகவே வெப்பத்தை கடத்துகிறது . அதனால் இந்த வகையான செங்கல் மிகவும் பயனுள்ளதாகவும், தீங்கு விளைவிக்காத வகையில் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அருமையான தகவல்.
It’s a good try..but when we talk about nature..and to save trees..
need to think of another alternative..good luck…
It’s a good try..but when we talk about nature..and to save the trees..need to think of another alternative..good luck…
Machine mfr address