மார்க்வெஸ் என்பவர் சில வருடங்களாக தக்காளி செடியை பயிர் செய்வதற்கு ஆலோசனை செய்து வந்தார்.அவர் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி தக்காளி செடியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த விதியை பயன்படுத்தி வீட்டிலேயே எளிய முறையில் தக்காளி செடியை பயிர் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இயற்பியலின் பாயில் விதியை பயன்படுத்தி இந்த தானியங்கி பாசன அமைப்பு முறையை செய்தார். இதற்காக அவர் எளிய மற்றும் மலிவான பொருட்களை பயன்படுத்தினார்.
தேவையான பொருட்கள்:
- ஒரு பிளாஸ்டிக் கொள்கலன்.
- செவ்வக வடிவில் இரண்டு மரக்கட்டைகள்.
- இரண்டு பிளாஸ்டிக் குழாய்கள்.
- மாஃபில் உள்ள திரி.
- பிளாஸ்டிக் தொட்டி.
- காலியாக உள்ள 3 லிட்டர் தண்ணீர் குவளை.
செய்முறை:
பிளாஸ்டிக் தொட்டியின் அடிப்பகுதியில் துளைகளை போட வேண்டும்.
பிறகு மாஃபின் திரிகளை அந்த துளைகளில் பொருத்த வேண்டும்.
இரண்டு மரக்கட்டைகளையும் X வடிவில் கொள்களனில் வைக்க வேண்டும்.
கொள்களனில் ஒரு துளை போட்டு பிளாஸ்டிக் குழாயின் ஒரு முனையை அந்த துளையில் பொருத்த வேண்டும். பின்பு பொருத்தப்பட்ட அந்த பிளாஸ்டிக் குழாயின் மற்றொரு முனையை காலியாக உள்ள 3 லிட்டர் குவளையில் இணைக்க வேண்டும்.
காலியாக உள்ள 3 லிட்டர் குவளையினுள் தண்ணீர் கேனை கவிழ்த்து வைக்க வேண்டும். பிறகு குழாய்கள் வழியாக கொள்களனுள் தண்ணீரை அனுப்ப வேண்டும்.
பிறகு அந்த பிளாஸ்டிக் தொட்டியில் மண்ணை நிரப்பி தக்காளி செடியை நட்டு கொள்களனுள் உள்ள X வடிவ மரக் கட்டையின் மேல் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அந்த செடிக்கு குழாயின் வழியாக தானாகவே தண்ணீர் கிடைக்கும்.
இதனால் பிளாஸ்டின் தோட்டியில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் செடிக்கு தேவையான அனைத்து சத்துகளும் சரியான முறையில் கிடைக்கும் என்று மார்க்வெஸ் கூறுகிறார்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli
Really very nice idea
pl can u ask him to contact me pl 8754472712