ஜெர்மன் வியாபார கூட்டாளிகள் மற்றும் ஜில்போ தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து Micro and Nano Fibrillated Cellulose (M/NFC) – ஐ அடிப்படையாகக் கொண்டு கோதுமையின் வைக்கோலில் இருந்து உணவு பெட்டி தயாரிக்கின்றனர்.
லிங்கோ செல்லுலோசிக் ஃபைபர் என்ற மூலப்பொருள் உணவு பெட்டியை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த பெட்டியை தயாரிக்க எந்த ஒரு சேர்ப்பான்களையும் பயன்படுத்துவதில்லை. விவசாய கழிவின் மூலம் உணவு பெட்டியை உணவு துறை வடிவமைப்பாளர்கள் வடிவமைக்கிறார்கள்.
இந்த பெட்டி வலுவான மற்றும் நெகிழ்வான வடிவத்தை கொண்டது. மேலும் மென்னையாக மூடக்கூடியதாக இருக்கும் என்று வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.
அனைத்து வகையான நார் சார்ந்த விவசாய பயிர் கழிவுகளிலிருந்தும் உணவு பெட்டியை தயாரிக்கலாம். ஆனால் தற்போது நாங்கள் கோதுமை வைக்கோலைப் பயன்படுத்தி இந்த உணவு பெட்டியை தயாரித்துள்ளோம் என்று வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வகையான பெட்டி மக்களுக்கு மிகவும் உதவியானதாகவும், ஆரோகியமானதாகவும் இருக்கும். இந்த பெட்டியை தயாரிக்க எந்த ஒரு இரசாயன பொருளும் சேர்ப்பதில்லை. அதனால் இந்த பெட்டியை பயன்படுத்துவோர்க்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது . இதனால் சுற்றுபுற சூழல் பாதிப்படைவதையும் தடுக்கலாம் என்று வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli