விவசாய நண்பர்களுக்கு வணக்கம்,
நமது அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் கழிவுகளாக வீணாகின்றன. அதிலும் குறிப்பாக வேளாண்மை சார்ந்த பொருட்களிலிருந்து மிகவும் அதிகமான பொருட்கள் கழிவுகளாக வீணாகுகின்றன. அந்த கழிவுகளினால் நம்முடைய சுற்றுசூழல் மிகவும் மாசுபடுகிறது. அதனால் நம்முடைய உடல் நிலை பாதிப்படைந்து வாழ்க்கை நிலையும் பாதிக்கப்படுகிறது.
அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்து நமக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களாக செய்து பயன்படுத்தினால், சுற்றுசூழல் மாசுபாட்டை தடுத்து நமது உடல்நிலையையும் பாதுகாக்கலாம் என்று கருதி நமது விவசாய நிறுவனம், ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளது.
வேளாண்மை கழிவுகளிலிருந்து மக்களுக்கு பயன்படும் வீட்டு உபயோகப் பொருட்களாக மாற்ற உதவும் பல்வேறு வழிமுறைகளை கட்டுரையாக எழுதி தருபவர்களுக்கு இயற்கை முறையில் விளைந்த 25 கிலோ அளவுடைய தினை, குதிரைவாலி, சாமை மற்றும் தேங்காய் அடங்கிய பை வழங்கப்படும்.
இந்த பரிசானது வாரம்தோறும் சிறப்பாக கட்டுரை எழுதி அனுப்பும் இரண்டு பேருக்கு வழங்கப்படும்.
கட்டுரைகள் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி: editor.vivasayam@gmail.com
மேலும் விவரங்களுக்கு
editor.vivasayam@gmail.com