விவசாயிகளின் கவனத்திற்கு விவசாயம் சம்பந்தமான புதிய செய்திகளையும் ,புதிய தயாரிப்புகளையும் உங்களிடையே அறிமுகப்படுத்துவதில் விவசாயம், இணையதளம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனாலும் நாங்கள் கொடுக்கும் தகவல்களை நீங்கள் பரிசோதித்து பார்த்து அந்த தகவல்களை எங்களுடனும்,விவசாயிகளுடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நெல், மக்காச்சோளம் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவற்றிலிருந்து வரும் விவசாய கழிவின் மூலம் விலை குறைவான கட்டுமான பொருட்கள் கதவு, ஜன்னல் (pannels) போன்ற பகுதிகளை செய்யலாம்.
நெல், மக்காச்சோளம் மற்றும் கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்யும் போது வரும் விவசாய கழிவுகள் தொடர்ச்சியாக கிடைக்கக் கூடிய கழிவு என்பதால் நாம் எப்போதும் இந்த விவசாய கழிவுகளை வைத்து விலை குறைவான கட்டுமான பொருட்களை தயாரிக்கலாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினரின் அடிப்படை வாழ்க்கை நிலையை இந்த விவசாய கழிவுகளை கொண்டு மேம்படுத்தலாம்.
நெல், மக்காச்சோளம் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவற்றிலிருந்து வரும் விவசாய கழிவின் மூலம் சுற்றுப்புற சூழல் மிகவும் பாதிப்படைந்து காற்று மாசுப்பாடு ஏற்படுகிறது. இந்த விவசாய கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் காற்று மாசடைவதை தடுக்கலாம். இதிலிருந்து கிடைக்கக்கூடிய பெரும்பாலான கழிவுகள் நார் பொருட்களாக வைத்து கிடைக்கின்றன. இந்த நார் பொருட்களை வைத்து வீட்டுக்கு தேவையான சன்னல்கள், கதவுகள் போன்வற்றினை உருவாக்கலாம். இந்த நார் பொருட்களில் சில ரசாயானங்களை சேர்த்து எளிதில் தீப்பிடிக்காத வீடுகளை கூட கட்டலாம் .இதுபோன்ற முறைகளினை ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜீரியாவில் பயன்படுத்துகின்றனர். எனவே இதுபோன்ற முயற்சிகளை நம் ஊரில் செய்துபார்த்து மக்களுக்கு பலனளிக்கும் பட்சத்தில் விவசாய கழிவுகள் ஒரு புதிய புரட்சியை முன்னெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli