Vivasayam | விவசாயம்

விவசாய விலங்காக மான்!

3(1)

வழக்கமாக நாம் ஆடு, மாடு, கோழியை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஒரு சில சமயம் பன்றியை வைத்து கூட விவசாயம் செய்கிறோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்னும் இடத்தில் 254 ஏக்கரில் மான்களை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்ற இடத்தில் லெட்ஜ் எண்ட் பண்ணையில் 400 மான்களை வைத்து ஹாங்க் டிமூசியோ (லெட்ஜ் எண்ட் பண்ணையின் விவசாயி மற்றும் நிறுவனர்) மற்றும் அவருடைய மனைவி ரோண்டா இருவரும் சேர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

 விவசாயம் செய்ய மான்களை தேர்வு செய்வதற்கான காரணம்:

மான்களை வைத்து விவசாயம் செய்யும் முறையானது நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மான்கள் இனம் அழியாமலும் பாதுகாக்கப்படும் என்பதற்காகவே இந்த மான் விவசாய முறையை நாங்கள் தேர்வு செய்தோம் என்று ஹாங்க் டிமூசியோ கூறியுள்ளார்.

லெட்ஜ் எண்ட் பண்ணையில் மான்களை வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரித்து பயிர் நடுவதிலிருந்து, அறுவடை செய்யும் வரை சுழற்சி முறையை பயன்படுத்திதான் இந்த விவசாயத்தை செய்து வருவதாக ஹாங்க் டிமூசியோ கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version