உலகில் அதிகமான தேவை உள்ள பொருட்களில் சிமெண்டும் சேர்ந்துவிட்டது. ஏனெனில் சாலை அமைப்பதில் ஆரம்பித்து, வீடு அலுவலகம் கட்டுவது என எல்லாமே பெருகிவிட்டது. ஆகையால் கட்டுமானப்பொருட்களுக்கு அடிப்படை ஆதாரமாக சிமெண்ட் உள்ளது. எனவே சிமெண்டின் தேவை மிக அதிகமாகிவிட்டது. உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகள் எல்லாம் தற்போது சிமெண்டிற்கான மாற்றை தேடி ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நம் எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி கிடைத்துள்ளது. அது என்னவெனில் நெல் உமியிலிருந்து சிமெண்டினை உருவாக்கலாம் என்பதே. ஆம், நெல் உமியை குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் எரிக்கும்போது கிடைக்கும் சாம்பலை சிமெண்டிற்கு மாற்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்
உலக அளவில் இந்தியா நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தினை வகிக்கிறது. இங்கேயும் சீனாதான் முதலிடம். நெல் ல் இருந்து கிடைக்கும் உமி தவிடாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முழுமையான உமியும் அதிகமாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது நெல் உமியில் இருந்து கிடைக்கும் சாம்பலை சிமெண்டிற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்பது நம் அனைவருக்கும் சந்தோசமான செய்தியே
ஆய்வில் .Rice husk ash(RHA) சிறிதளவே நமது உள்ளூர் சேர்க்கை நெல் உமி சாம்பல் கொண்டு சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டாக (ஓபிசி) மாற்றி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மாற்றத்தால் கான்கிரீட் சூப்பர் போசோலானியாக் வருவதை கண்டனர்.இந்தஆய்வுபணியைக் முழுமையாக பயன்படுத்தினால் வேளாண் கழிவு மேலாண்மை பிரச்சனையும் சரியாகிவிடும்.
நெல் உமி 400 – 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்வைத்து 72 மணி நேரம் எரிக்கப்பட வேண்டும்.
75μm பிஎஸ் நிலையான சல்லடையில் இந்த சேகரிக்கப்பட்ட சாம்பலை போட வேண்டும். பின்பு அதன் நிறம் சாம்பல் நிறமாக மாறிவிடும். 43 கிரேட் உள்ள வு Cement – Ordinary Portland cement (OPC) –டை இந்த கலவையில் சேர்க்கப்பட்டது. இந்த கலவையை கலப்பதற்கு o water தான்முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ச்சி வடிக்கட்டிய தண்ணீரையே இந்தகலவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் சிமெண்ட்விகிதம் -: 0.45 விகிதம் -: 1: 1.5: 3: 0.45
. இந்தமுறையைசெய்வதற்காகவழிக்காட்டியவர் பிரஷாந்த்குமார், செய்தவர்கள் 1.பிரவீர் ப்ரீகுவான்சி 2.அன்ஷூமன்மணி 3. அமிடீஸ்குமார் 4. பால்ஸ்வேதா பிரகாஷ்.