Vivasayam | விவசாயம்

செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:

49

தானியங்கி தண்ணீர் பாசனம் செய்யும் ரோபோ பசுமைக் குடில் நோக்கி தானே தண்ணீரை ஊற்றுகிறது.

டேவிட் டேர்ஹார்ட் தானியங்கி ரோபோவை கண்டுபிடித்துள்ளார். டேவிட் கண்டுபிடித்த இந்த ரோபோ பயிரிடப்பட்ட செடிகளுக்கு துல்லியமாக 90,000 சதுர அடி தண்ணீரை கொடுக்கிறது. 30 கேலான் தண்ணீர் தொட்டி கொண்ட ரோபோ தன்னிச்சையாக கிரின்ஹவுஸ் – ஐ சுற்றி வந்து 24X7 என்ற அளவு தண்னீர் வழங்குவதை நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ரோபோவை டேவிட் உருவாக்கியுள்ளார்.

தன்னிச்சையாக இயங்கும் ரோபோ எளிதான மூன்று அமைப்பு முறைகளை கொண்டு வேலையை செய்து வருகிறது. மேலும் இந்த செடிகளுக்கு தண்ணீர் தேவை எனில் சென்சார்கள் அளிக்கும் தகவல்களின் படி இந்த தானியங்கி ரோபோ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகிறது.

டேவிட்  விவசாய மற்றும் உயிரியல் தொழில்நுட்ப துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் கண்டுபிடித்த இயந்திர ரோபோ எதிர்காலத்தில் பரோஸ்பேரோ ரோபோ விவசாயியாகவே மாறி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்.

Exit mobile version