Skip to content

உலகில் முதல் முதலாக செயற்கை இலையால் பிராண வாயு தயாரிப்பு

இந்த செயற்கை இலையை அமெரிக்காவில் உள்ள ராயல் கல்லூரியில் படித்துவரும் ஜூலியன் மெல்சியோரிஎன்ற மாணவன் உருவாக்கியுள்ளான்

தாவரங்களில் உள்ள குளோரோபிளாஸ்டை தனியாக பிரித்து எடுத்து செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இலையில் பொருத்தப்படுகிறது. இதன்பின் இந்த செயற்கை இலையை கொண்டு ஆக்சிஜன் உருவாக்கப்படுகிறது. இந்த இலையானது ஆக்சிஜன் இல்லாத இடங்களான விண்வெளியில் விண்வெளி பயணத்தின் போது விண்வெளி வீரர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும்

தாவர செல்களில் இருந்து பச்சயங்களை பிரித்தெடுத்து, பட்டு புரதங்கனுள்ளே பொருத்தப்படுகிறது. பின்பு இந்த இலைகளிலும் உண்மையான இலைகளை போலவே ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறதா என்று ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த இலை உண்மையான தாவரங்களை போன்று நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றனவா  என்பதையும் உறுதி செய்துள்ளனர். இந்த இலைகளை உறுதியான பட்டு புரதங்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது

இந்த செயற்கை இலையினை உருவாக்கிய   ஜூலியன் மெல்சியோரி- யிடம்  கேட்ட போது,. விண்வெளி பயணத்தின் போது ஆக்ஸிஜனை கொண்டு செல்ல NASA விண்வெளி பஆ்ய்வுநிறுவனம் பல்வேறு வழிகளில் ஆராய்ச்சி செய்துவருகிறது.  நான் உருவாக்கிய  இந்த செயற்கை இலையை விண்வெளிக்கு பயணம் செய்யும் போது எடுத்துச்செல்ல அனுமதி வழங்குவார்கள் என்று நம்புவதாக கூறினார்.

ஜூலியன் மெல்சியோரி-னின் கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் மருத்துவம், விண்வெளி,கட்டடக்கலை சார்ந்த திட்டங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj