Skip to content

விவசாயிகளே, எச்சரிக்கை!!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் !!
ஏன் கையே ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!!

என்றபாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது உலகமயமாதலில் எல்லாமே உலகமயமாகிவருகிறது. இந்த உலகமயமாதலால் நம்மிடம் தேவை இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டு பொருட்களும் நம் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது.

தற்போது உலக வர்த்தக அமைப்பு அமெரிக்க கறிக்கோழிகளையும், பன்றிஇறைச்சியையும் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவிற்கு விதித்துள்ளது.
ஏற்கனவே பிராய்லர் கோழி இறைச்சிகளால் நம்மிடையே உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்ற எண்ணம் நிலவி வருகிறது. இதில் வெளிீநாடுக்கோழிகளையும் இந்தியாவிற்குள் அனுமதித்தால் என்ன விதமான நோய்ஏற்படும் என்பதையும் ஆராயவேண்டும்.

இந்திய அரசாங்கத்திற்கு பணம் வேண்டுமென்பதற்காக நம் நாட்டினை அந்நிய நாடுகளின் நிறுவனத்திற்கு சந்தையை கொடுத்தால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

எனவே கப்பலோட்டிய தமிழன் வஉசி ஆரம்பித்த சுதேசி இயக்கத்தினை ஆரம்பிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. உள்ளுரில் உற்பத்திய செய்த பொருளையே வாங்குவோம் என்று நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டிய நேரமிது
விவசாயிகளே!! நம்மூரில் நாளே பொருட்களை உற்பத்தி செய்து நாமே பொருட்களை சந்தைப்படுத்துவோம்!! நம் ஒற்றுமையே நம் வலிமை

6 thoughts on “விவசாயிகளே, எச்சரிக்கை!!”

  1. எச்சரிக்கை விவசாயிகளுக்கு அல்ல. மக்களுக்குத்தான் எச்சரிக்கை. ஒரு காலத்தில் அறிவார்ந்த சமூகமாக இருந்தது, அறிவிழந்த சமூகமாக மாறிவிட்டதே.

  2. Nam nattu viyabarigal vilai kuraithu vitral, ethai vendumanalum Vangum koottam Nam nattil ulladhu.VOC Kappal company nasamapponathukku karanam indha vilai kuraippu than.
    10 varuda Chicken legs old stocks USA export seiya thayaraga vaithlladhu.

  3. விவசாயிகள் தமிழக அரசை எதிர்பார்பதை விட அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj