விதவிதமான ரகங்கள். . .
கூடுதல் கொடுக்கும்
உதயம் வாழை!
ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடிக்கான பட்டம், மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், சில வாழை ரகங்ளைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். திருச்சியில் உள்ள தேசீய ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் எம்.எம் முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ். உமா.
கனர், உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி!
களர், உவர் மண் வகைகளிலும் வறட்சியிலும், தாங்கி வளரக்கூடியது கற்பூரவல்லி ரகம், மரங்கள் தடித்து வளர்வதுடன் உயரமாகவும், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும். தோல், மிதமான கெட்டித்தன்மையுடன், சாம்பல் பூச்சுடன் காணப்படும். தார்கள் உருளை வடிவில்இருப்பதால் நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. ஜீஸ், உலர்பழங்கள், வாழைப்பூ சட்னி என தயாரிக்கலாம். இலை பயன்பாட்டுக்கும் இந்த ரகம் பயிரிடப்படுகிறது. இதன் வயது 14 முதல் 16 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 180 முதல் 200 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 25 முதல் 28 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தில் ‘பனாமா வாடல்நோய்’ தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்து, கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
காற்றில் சாயாத உதயம்!
திருச்சி, தேசீய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2005-ம் ஆண்மு உதயம் வாழை ரயம் இது. ஆனால் கற்பூரவல்லியை விட 40 சரவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக் கூடியது. தார் உருளையாக இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றது. இதன் பழங்களில் இருந்து ஜீஸ், ஜாம், உலர்பழங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மரங்கள் உறுதியான தண்டுடன், உயரமாக இருக்கும். ஒவ்வொரு தாரும் 35 முதல் 40 கிலோ எடை வரை இருக்கும். நன்றாக பராமரிப்பு செய்யும் பட்சத்தில், 50 கிலோ வரை எடை இருக்கும். பழுக்க ஆரம்பித்ததில். 50 கிலோ வரை எடை இருக்கும். பழுக்க ஆரம்பித்ததில் இருந்து அதிகபட்சம் 7 நாடகள் வரை மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். காற்று அதிகம் வீசும் பகுதிகளில் பயிரிட ஏற்ற ரகமிது. வாழை முக்கொத்து நோயை உதிர்த்து வளரும் சக்தி கொண்டது இந்த ரக வாழையும் களர் மற்றும் உவர் தண்மையைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.
ஊடுபயிருக்கு ஏற்ற பச்சநாடன்!
தமிழ்நாடு, கர்நாடாக, கேராள ஆகிய மாநிலங்களில் பச்சநாடன் வாழை ரகம் பயிரிடப்படுகிறது. தென்னை, பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக பயிரிட ஏற்றது. மலைப்பரதேசங்களில் இதை லாடன் என்றும், சமவெளிப் பகுதிகளில் நாடன் என்றும் அழைக்கன்றனர். கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன் மாதிரியான நீண்டகால வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் கன்றுகள் அழுகிப்போனாலோ அல்லது காய்ந்து போனலோ இடைவெளிப் பகுதியில் அவற்றை நடவு செய்தால், அந்த வாழை ரகமும் அறுவடைக்கு வந்துவிடும். இதனாலேயே இந்த வாழை ரகத்தை காலி வாழை என்றும் விவசாயிகள் அழைகிறார்கள். இருமண் மற்றும் கரிவல் மண் ஆகியவற்றில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது. இது இந்த ரகத்தின் வயது 11 முதல் 12 மாதங்களாக இருந்தாலும் 8-ம் மாதத்திலே குலை தள்ளிவிடும். ஒவ்வொரு தாரிலும் 7 முதல் 8 சீப்புகளுடன், 100 முதல் 120 பழங்கள் வரை இருக்கும். தாரின் எடை 10 முதல் 15 கிலோ. இந்த ராகத்தில், மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீசு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகப்படுத்தும் இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இந்த ரகத்தை வாடல் நோய் தாக்கும் வாய்ப்பு உண்டு.
வறட்சியைத் தாங்கும் நெய் பூவன்!
கிராண்ண்ட்-9 (ஜி-9) வாழை ரயத்துக்கு அடுத்தபடியான ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம், நெய் பூவன் ‘ஏழரசி, ஞானிபூவன், ஏலக்கி பாலே, புட்டபாலே’ என்ற பல பெயர்கள் இருந்தாலும், பெரும்பாலும் நெங் பூவன் என்றே அழைக்கிறாகுள். இந்த ரகம் தமிழ்நாடு, கர்நாடாக, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுகிறது. எல்லா வகை மண்ணிலும் நன்றாக வளர்வதுடன் வறட்சியைத் தாங்கியும் வளரும். கர்நாடகா மற்றும் கேரளாவில் பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக இதை பயிரிடுகிறார்கள். இதன் வயது 13 முதல் 14 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 முதல் 18 கிலோ எடை வரை இருக்கும். பழங்கள் அதிக சுவையுடன் இருந்தாலும் காய்கள் கனிவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால், நன்கு பழுத்த பழங்கள் கூட எளிதில் உதிர்வதில்லை. இந்த ரக வாழையில் வாடல் நோய், நூற்புழு போன்றவை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், கன்று தேர்வு செய்யும் போது நோய் தாக்காத கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
காய்க்கும், பழத்துக்கும் மவுசு உள்ள நேந்திரன்!
காய்காகவும், பழத்துக்காகவும் இந்த வாழை ரகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. சிப்ஸ் காய், வறுவல் காய் நெடுநேதிரன், ஆட்டு நேந்திரன் எனவேறு பெயர்களும் உண்டு. இந்த ரகம் பெருமளவு சிப்ஸ் தயாரிப்பற்கு பயன்படுத்தப்பட்டாலும், கேரளாவில் பழமாகவும் சாப்பிடுகிறார்கள். ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறார்கள். பழங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பழங்களில் அதிகமாக தோல் சற்று தடிமனாக இருப்பதுடன், இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். பழங்களில் வைட்டமின்-ஏவும் (ஒரு கிராமில் 750 முதல் 800 மைக்ரோ கிராம்). எழும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்புச் சத்துக்களும் (ஒரு கிராம் பழத்தில் 14 மில்லி கிராம்) நிறைதுள்ளன.
இந்த ரகத்தின் வயது 11 முதல் 12 மாதங்கள் தமிழ்நாட்டில் மாசிப்பட்த்தில் நடவு செய்யலாம். இந்த ரகத்தில் மறுதாம்பு விடுவதில்லை. அதிகமான காரத்தன்மை கொண்ட நிலங்களில், இந்தரகம் சரியாக வளராது. ஒவ்வொரு பழமும் 20 முதல் 25 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும். ஒவ்வொரு தாரும் 5 முதல் 6 சீப்புகளுடன், 40 முதல் 50 பழங்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 கிலோ எடை இருக்கும். இந்த ராகத்தில் நூற்புழு, கிழங்கு கூன்டுவண்டு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் குறைக்க. பூச்சித் தாக்குதல் இல்லதா கிழங்குகளைத் தேர்வு செய்து, நடவு செய்ய வேண்டும்.
ரொபஸ்ட்டா, விருப்பாட்சி, செவ்வாழை, மொந்தன் போன்ற ரகங்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
—— நன்றி—பசுமை விகடன் —-
Sugandha bale (Vazhai )
endru oru Vazhai ragam vulladhu.
As an Agri Scientist &AC&ABC Founder I identified the variety.
Smells like Panneer and tastes like Kodaikanal Malai Vazhai pazham.
AC&ABC -Agri Clinic &Agri Business Centre.Chennai,Bengaluru&Tenkasi
Rasakathili..yea than valai patriya thagaval therivikka mudiyuma
Eya tban valai (Ethan valzai)