- மர விதைகள் சேகரிக்கும் இடம் மிகவும் முக்கியம், மிகத் தரமான,
பருமனான, அதிக முளைப்புத்திறனும், வீரியமும் கொண்ட விதைகள் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதவது, விதையின் மரபியல் மற்றும் தரமான விதையின் குணங்களில் எந்தப் பாதிப்பும் இருக்க கூடாது.
2.விதைகளைச் சேகரிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் மரம் மிக அதிக வயதும் வயதுமில்லாமல் நடுத்தர வயது உடையதாக இருக்க வேண்டும். மரம் நல்ல வளர்ச்சியும், வீரியமும் உடையதாக இருக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாது இருக்க வேண்டும்.
- மரங்களிலில் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம், காய் முதிர்ச்சி மற்றும் அறுவடை செய்யும் நாள், அறுவடை சமயத்தில் காய்களின் தன்மை அதாவது காய் வெடித்து சிதறுமா அல்லது சிதறாதா என்பதை நன்கு தெரிந்திருத்தல் வேண்டும்.
- நல்ல முதிர்ச்சி அடைந்த காய்களைத்தான் அறுவடை செய்யவேண்டும். இதைத் தெரிந்து கொள்ள பறித்த காய்களை வெட்டி அதனுள் இருக்கும் விதைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். விதைகள் நல்ல பருமானகவும், முதர்ச்சி அடைந்திருப்பதுடன், விதையின் தோல் கறுப்பாகவும், கடினமாகவும் இருந்தால் அரவ காய்களின் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகின்றன.
- காய்கள் அறுவடை செய்யப்படும் சமயத்தில், விதைகளின் காய்ந்த எடையும் முளைப்புத்திறனும் அதிகமாகவும், ஈரப்பதம் குறைவாகவும் இருத்தல் வேண்டும். இவை ஒரு முதிச்சி அடைந்த அறுடைக்குப் பக்குவமாக இருக்கும் சிதைகளின் குணங்களாகும்.
நன்றி
வேளாண் காடுகள்