தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலைப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.பழங்குடியினர் நிலங்களில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்புப் பணிக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள்
- தடுப்பனை அமைத்தல்
- குழாய் பதித்தல்
- கற்சுவர் அமைத்தல் மற்றும்
- நிலம் சமன்செய்தல்
மேற்கண்ட பணிகளின் மூலம் மேல் மண் பாதுகாக்கப்படுவதுடன் நீர் ஆதாரங்கள் பெருக்கப்பட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுகிறது. மேலும் மலைவாழ்மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.