Skip to content

வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

வேளாண் இயந்திரமயமாக்குதலின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், பண்ணை சக்தியின் அளவினை ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோவாட்டாக இருக்கும் வகையில் உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படவுள்ளது.

குறிக்கோள்கள்:-

            வேளாண்மை இயந்திரமயமாக்கும் உபஇயக்கத்தின் முக்கியக்குறிக்கோள்கள் பின்வருமாறு:

1)      சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் சென்று அடையும் வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்குதலை அதிகரித்தல் மற்றும் எந்தெந்த பகுதிகளில் பண்ணை சக்தியின் அளவு குறைவாக உள்ளதோ அங்கு வேளாண்மை இயந்திரமயமாக்குதலை அதிகப்படுத்துதல்.

2)      குறைந்த அளவு நிலம் வைத்துக் கொண்டிருக்கும் தனிப்பட்ட விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தினால் ஏற்படும் வருவாய்க்கு பொருந்தாத “வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்களை” நிறுவுவதை ஊக்கப்படுத்துதல்.

3)      உயர் தொழில் நுட்ப மற்றும் உயர் விலையுள்ள வேளாண இயந்திரங்களை உள்ளடக்கிய மையங்களை (hubs) ஏற்படுத்துதல்.

4)      செயல்விளக்கம் மற்றும் திறன் வளர்த்தல் பயிற்சி நடவடிக்கைகளை விவசாயிகளிடையே மேற்கொண்டு வேளாண்மை இயந்திரமயமாக்கும் விழிப்புணர்வினை உருவாக்குதல்.

5)      இந்தியா முழுவதும் உள்ள அங்கீரிக்கப்பட்ட பரிசோதனை மையங்கள் மூலமாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு பரிசோதனைகள் செய்து சான்று வழங்குதலை உறுதி செய்தல்.

நன்றி

வேளாண்மை இயக்குநர்

தருமபுரி

 

1 thought on “வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj