Site icon Vivasayam | விவசாயம்

ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

  • ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும்.
  • ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக 2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைட், 10 சதவீதம் அமோனியா, 2 சதவீதம் பார்மாலட் கரைசல், பிளீச்சங் பவுடர் ஏதாவது ஒன்றை உபயோகிக்கலாம்.
  • சாணம் மற்றும் கோமியம் போன்றவை உடனடியாக அப்புறப்படுத்திப் பண்ணைச் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஆடுகளை ஒரே இடத்தில் மேயவிடாமல் சுழற்சி முறையில் மேய்பதன் மூலம் நோய் வருவதை தடுக்கலாம்.
  • நோய் வந்த ஆடுகளை உடனடியாக மற்ற ஆடுகளிடமிருந்து பிரித்து நோய்களை முறையாக இனம் கண்டு அவற்றைச் சரியான சிகிச்சைக்கு உட்படுத்தி நோயை குணப்படுத்தலாம்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி மருந்தினை தகுந்த கால கட்டங்களில் போட்டு கொள்ள வேண்டும்.

நன்றி

மதுபாலன்

வேளாண்மை இயக்குநர்

தருமபுரி

Exit mobile version