Site icon Vivasayam | விவசாயம்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.

 “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவை ஒரு ஹெக்டேர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.

பயிர்கள் மானியத்தொகை( 1 ஹெக்டேருக்கு)
திசுவாழை 30,750
எலுமிச்சை 12,000
வீரிய மிக்க காய்கறி 20,000
கிழங்கு வகைகள், மலர்கள் 37,500
மிளகாய், மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் 12,000
ஜாதிக்காய் 20,000
பாலிதீன் மல்ச்சிங் எனும் நிலப்போர்வை அமைக்க ( ஒரு யூனிட்) 16,000
உதிரிமலர்கள் மல்லிகை, கனகாம்பரம், செண்டுமல்லி… சாகுபடி 10,000
கடந்த ஆண்டு நடவு செய்த கோகோ செடிகளை, நடப்பு ஆண்டில் பராமரித்திட 4,000

மேற்கண்டவை தவிர, மண்புழு உரம் தயாரிப்பு, டிராக்டர், பவர் – டில்லர் ஸ்பிரேயர்… போன்றவற்றுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

     இதில் சிறுவிவசாயி, பெண்கள்…போன்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. இந்த மானியங்களைப் பெற நிலத்தின் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, 3 போட்டோ, மண் மாதிரி முடிவுகளை இணைத்து, அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புக்கு, செல்போன்: 98420-07125

நன்றி

பசுமை விகடன்

Exit mobile version