நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு
மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட தண்ணீரால்தான் நமக்கு மலை மேகங்கள் உருவாகின்றன, மழை மேகங்கள் மூலமாக கிடைக்கின்ற ஆறுகள் வழியாகத்தான் நாம் பயன்படுத்துகின்ற தண்ணீர்கள் நமக்கு கிடைக்கின்றது. இதுதான் இயற்கையில் நியது.
கடந்த நூற்றாண்டில் பெருகிய மக்கள் தொகையால் உலகின் முக்கியமான ஆறுகள் வற்றும் நிலையிலும், சில அந்த தண்ணீரினை நாம் பயன்படுத்த முடியாத படியும் மாற்றப்பட்டு விட்டன. உலகமயமாக்கல் ஒரு பக்கம் வரப்பிரசாதம் என்றால் அதன் மறுபக்கம் நம்முடைய இயற்கை வளங்கள் நம்மால் சுரண்டப்பட்டுவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை
இன்று நமக்கு கிடைக்கூடிய நீரில் பாதியளவை சமைக்கவும் , குளிர்பானங்கள் செய்யவும், துணி துவைக்கவும் மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம். இந்த நிலை அப்படியே சென்றால் அடுத்த பத்தாண்டுகளில் தண்ணீருக்கு நாம் பெரும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தண்ணீரை சேமிக்கக்கூடிய முக்கியமான இடங்கள் காடுகள், பசும்புல்வெளிகள், நீர்நிலைகள் ஆகியவைகள்தான். இவைகள்தான் தண்ணீரால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பினையும் சமாளித்து, மலைத்தண்ணீரை மெதுவாக சேர்த்து தேக்கி அணை வடிவிலும், அருவி வடிவிலும் சேர்த்து வைக்கின்றன. இப்படி சேர்த்து வைப்பதால் நிலத்தடி நீர் மட்டத்தினை சரியான விகிதத்தில் வைக்கின்றன.. ஆனால் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் நாம் 32 மில்லியன் ஏக்கர் காடுகளை இழந்துவருகிறோம். இதனால் பூமியில் சேர்த்து வைக்கூடிய நிலத்தடி நீர்மட்டம் ஆண்டு தோறும் குறைந்துகொண்டே வருகின்றது.
இதனால் இன்றைய உலகம் சுகாதாரமற்ற, மாசுப்பந்த தண்ணீரைத்தான் நாம் இயற்கையிடமிருந்து பெற்றுவருகின்றோம். இதனால் நம் உடலுக்கு ஏற்படக்கூடிய தீங்குகள் ஏராளம்.
நம் நீர்வளங்களையும், நீர் ஆதாரங்களையும் எப்படி பாதுகாக்கலாம்
காடுகளை இழக்காமல் நாம் பாதுகாக்கவேண்டியது அவசியம்
இழந்த காடுகளையும், பசும்புல்வெளிகளையும் நாம் மீண்டும் உருவாக்கிட வேண்டியது அவசியம்
விவசாயிகளுக்கு குறைந்த அளவில் நீரை பயன்படுத்தி விவசாயத்தினை மேம்படுத்திடவேண்டியதும் அவசியமாகிறது.
நிலத்தடி நீராதாரங்களை உருவாக்கிட வேண்டியதும் அவசியம்.இதனால் நிலத்தடி நீர் மட்டம் என்றும் குறையாமல் இருக்கும்.
இயற்கை நமக்கு கொடுக்கூடியதை நாம் சேர்த்து வைக்க வேண்டியது அவசியம். இல்லையேல் அதற்கான விலையை நாம் கொடுத்தே ஆகவேண்டும்.
எனவே நண்பர்களே இன்றிலிருந்து ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் சேமிப்போம், பணம் சேமித்தால் எப்படி நம் குடும்பம் செழிக்குமோ அப்படியேத்தான் இந்த தண்ணீரும் நம் குடும்பத்தினைரை சேமிக்கட்டும்.