Site icon Vivasayam | விவசாயம்

தர்பூசணி மற்றும் முலாம் பழம்

மண்

       மணற்கலந்த குறுமண் தர்பூசணியில் வளர்ச்சிக்கு ஏற்றது. களர் அமிலத்தன்மை 6.5 – 7.5 ஆக இருக்க வேண்டும்.

பருவம்

       நவம்பர் = டிசம்பர், வெயில் காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்களில் சுவை அதிகமாக இருக்கும். விதையளவு 1 – 3.5 கிலோ இரகத்தை பொறுத்து மாறும்.

விதை நேர்த்தி

      ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடமோனாஸ் 10 கிராம் என்றளவில் விதைநேர்த்தி செய்யவும்.

இடைவெளி

      துல்லிய பண்ணை முறையில் 2.5 மீ x 0.9 மீ இடைவெளியை பின்பற்ற வேண்டும். விதைப்பு மற்றும் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை மேற்கூறிய இடைவெளியில் விதைக்கவும்.

நடவு

      துல்லிய பண்ணை முறையில் குழித்தட்டு நாற்றுக்களை எக்டருக்கு 14,500 என்றளவில் நடவு செய்ய வேண்டும்.

உரமேலாண்மை

       எக்டருக்கு 20 டன் தொழு உரம், மணிச்சத்து 50 கிலோ (சிங்கள் சூப்பர் பாஸ்பேட் – 300 கிலோ) சாம்பல் சத்து 55 கிலோ (பொட்டாஷ் – 80 கிலோ) ஆகியவற்றை அடியுரமாக இடவும்.

      தழைச்சத்து 55 கிலோ (யூரியா 120 கிலோ) நடவு செய்த 30 நாட்களுக்கு பிறகு மேலுரமாக இடவேண்டும்.

      நீர்வழி உரமாக அளித்தால் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்தவும். எக்டருக்கு அடியுரம் தொழுஉரம் – 25 டன்,சூப்பர் பாஸ்பேட் -470 கிலோ, நீர்வழி உரம் தழை, மணி, சாம்பல் சத்து 200 : 25 : 100 (கிலோ/எக்டர்)

பயிரின் வளர்ச்சி பருவம் உரமிடும் கால இடைவெளி கொடுக்கப்பட்ட வேண்டிய உரம் எண்ணிக்கை அளவு கிராம், தடவை
முதல் நடவு – 10 ம் நாள் 19:19:1913:0:45

யூரியா

33

3

8.83.7

9.8

இரண்டு 11 – 30 ம் நாள் 12:6:013:0:45

யூரியா

77

7

1.89.5

15.5

மூன்று 31 – 50 ம் நாள் 19:19:1913:0:45

யூரியா

77

7

5.67.1

14.3

நான்கு 51 – 65 ம் நாள் 12:6:013:0:45

யூரியா

55

5

1.613.3

22.0

பயிர்வளர் இடைத் தொழில்நுட்பம்

      நடவு செய்த 30 ஆம் நாள் களை எடுத்து மண் அணைக்கவும். இரண்டு இலை நிலையிலிருந்து எத்ரல் 250 பி.பி.எம் (2.5 மி.லி/லிட்டர் நீரில் ) என்றளவில் ஒரு வார இடைவெளியில் நான்கு முறை தெளிக்கவும். இதன் மூலம் பெண் பூக்கள் அதிகரித்து காய்ப்பும் அதிகரிக்கும்.

      பெரும்பாலும் தர்சபூசணியில் போரான் சத்து குறைபாடு காணப்படுகிறது. இதனால் காய்கள் வளர்ச்சி தடைப்பட்டு அவற்றின் வடிவமும் பாதிக்கப்படும். சரியான வடிவில் இல்லாது தரம் குறைவதால் சந்தை விலைக்குறையும். எனவே நுண்ணூட்டக் கலவை 0.5 சதம் என்றளவில் இலைவழியாக தெளிக்கவும்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி

Exit mobile version