சுமாரக 5௦௦௦ ருபாய் செலவு செய்தால் தோட்டம் போடலாம். அதில் விதைகள், செடிகள், உரம், நுண்ணுட்ட சத்து, செரிவுட்டபட்ட மண், தொட்டிகள், எல்லாம் அடங்கும். ஆனால் முன்புகூறியது போல் உபயோகம் இல்லாத பொருள்களை எடுத்து கொண்டால் செலவு குறையும். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து படிபடியாய் பெரிதாக்கி கொள்வதும் நல்லது. உங்களது உழைப்பில் உருவாகும் செடிகளை பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம் உங்கள் செலவை எண்ணி பெருமை கொள்ள வைக்கும். நிச்சயமாக உங்களின் செலவையும், உழைப்பையும் விட அதிகமான பலன்களையே இந்த பச்சை செல்வம் கொடுக்கும்.
பூச்சிகொல்லிகள் தேவைப்படுமா?
பூச்சிகளிடமிருந்து காக்க நமது அடுப்பங்கரை குப்பையிலிருந்து செய்யும் உரமும், பஞ்ச கவ்யம் எனப்படும் மருந்துமே போதும். (பஞ்ச கவ்யம் தயாரிப்பு தனியாக உள்ளது).
நன்றி
வேளாண்மை உதவி இயக்குநர்
தருமபுரி.