வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள்:
அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும்.
வளர்ப்பதற்கான குறிப்புகள்:-
- செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது.
- தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமன சிமென்டு தொடிகளை பயன் படுத்தினால் திரும்ப திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டிகளில் செம்மண், மணல், கார்டன்ப்ளூம் உரத்தை கலக்கவும். 3. செடிகளுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் விடவும். இயற்கை உரங்களைப் போடு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள், சுவையாக இருப்பதோடு உடல் நலத்திற்கும் மிக நல்லவை.
- தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய் போன்ற காய்கறி செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.
- அவரை கொடி பூக்காமல் இருந்தால் இலைகலை இடையிடையே உருவி எடுத்து விட்டால்பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத்தொடங்கும்.
- கருவேப்பிலை செடி காய்ந்து விட்டால் அந்த இடத்தை பறித்து விட்டால் உடனே துளி விட்டு படர்ந்து வளரும்.
- எழுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போட்டால் செழித்து வளரும் காயும் காய்த்து விடும்.
- வீட்டுத் தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா இருந்தால் முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டல் பின்னல் நன்றாக காய்க்கும்