Site icon Vivasayam | விவசாயம்

கொத்தமல்லி………..

புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி விட்டால் போதும். வளர்ந்து விடும். நன்றாக வளர்ந்ததும் பிடுங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். பூப்பதற்கு முன் பறிப்பது நல்லது. கொத்தமல்லி இந்த செடி வைப்பதற்கு, மரப்பெட்டியில் மண்ணை நிரப்பி, 1/4 இன்ச் ஆழத்தில் மல்லி விதையை, சரியான இடைவெளியில் வரிசையாக விதைத்து, தண்ணீர் ஊற்றி, போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி.

Exit mobile version