Site icon Vivasayam | விவசாயம்

வாழையில் பயிர் பாதுகாப்பு

நடவு வாழை கிழங்கு மேலாண்மை
தரமான கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும் (1 கிழங்கு 2 கிலோ அளவில் இருக்க வேண்டும்) பிறகு கிழங்குகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

சுத்தம் செய்த கிழங்குகளை மண் கரைசலில் நனைந்து பின்பு கார்பன்சிம் 1 கிராம் / லிட்டர் ( 5 நிமிடங்கள் ) மற்றும் கார்போபியுரான்–3 G40 கிராம் என்ற அளவில் கிழங்கின் மீது நன்கு தூவி பின்பு நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் கிழங்கு அழுகல் மற்றும் வாழை நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

வாழையில் முடிகொத்து நோய் (பஞ்சி டாப்) :
வாழையில் முடி கொத்து நோயை பரப்பும் அசுவினிகளை கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் ஒரு ஏக்கருக்கு 100 மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து (அ) பாஸ்போமிடான் ஒரு ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வாழையில் இலைபுள்ளி நோய் கட்டுப்படுத்துதல்

நோயை கட்டுப்படுத்துவதற்கு கார்பண்டசிம் 1 கிராம் / லிட்டர் தண்ணீரில் அல்லது மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் தண்ணீர் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 2.5 கிராம் / லிட்டர் தண்ணீரில் தெளிக்க வேண்டும்.

நன்றி!
வேளாண்மை உதவி இயக்குநர்
தர்மபுரி

Exit mobile version