அது மிக மிக எளிது…
1) உங்களிடம் உள்ள ஒரு நல்ல தொட்டியோ, பானையோ, பால் போடும் கிரேடுகள் (முடிந்த அளவு புதியதை தேடாமல் பழையவற்றை மறு உபயோகம் செய்தால் குப்பைகளை குறைத்தும் கொள்ளலாம்) எடுத்துகொள்ளவும். அதில் அதிக படியான நீர் செல்ல ஒரு துவாரத்தை அமைத்து கொள்ளவும்
2) இதில் மண், மக்கிய குப்பை, மணல் (அ) தேங்காய் நார் இவற்றுடன் மண் புழு உரம் அனைத்தையும் சம அளவில் எடுத்து கொள்ளவும். 3) துவாரத்தை அடைத்து கொண்டு இந்த கலவையை நிரப்பியவுடன் தண்ணீர் ஊற்றி மண் மற்றும் கலவை வெளியேராததை உறுதி செய்து கொள்ளவும். இப்போது கலவையை ஈரமாக்கி உங்களின் பிரியமான உணவின் விதையோ, செடியோ நட்டு வைத்து அது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளருவதை கண்டு களியுங்கள்.