Skip to content

கொண்டைக்கடலை

இரகங்கள் மற்றும் விதைப்பு :-

இரகங்கள் கோ-3, மற்றும் கோ-4. விதை அளவு கோ-3-ற்கு 36 கிலோ / ஏக்கருக்கும்,கோ-4-ற்கு 30 கிலோ / ஏக்கருக்கும் தேவைப்படும். விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது திரம் 2 கிராம் அல்லது 4 கிராம் டிரைக்கோடேர்மோ விரிடி அல்லது  10 கிலோ சூடோமோனாஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பொட்டலம் ரைசோபியம் கலந்து விதைக்க வேண்டும். விதைக்க 3 நாட்களுக்குப் பின்னர் ஒரு எக்டருக்கு ப்ளுகுளோரலின் அல்லது பென்டிமெத்திலின் 1 லிட்டர் தெளிக்க வேண்டும். பின் 20- 25 நாட்கள் இடைவெளியில் ஒரு களையெடுப்பு செய்தல் வேண்டும்.

 ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை :-

அடியுரமாக ஏக்கருக்கு மானாவாரிப்பயிராக  இருந்தால் 5 கிலோ தழைச்சத்தும், 10 கிலோ மணிச்சத்தும் மற்றும் 5 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். இறவைப் பயிராக இருந்தால் 10 கிலோ தழைச்சத்தும் மற்றும் 20 கிலோ மணிச்சத்தும் மற்றும் 10 கிலோ சாம்பல் சத்தும் தரக்கூடிய இராசாயன உரங்களை இடுதல் வேண்டும்.

நன்றி..!

வேளாண்மை இயக்குநர்

தருமபுரி

Murali Selvaraj

Murali Selvaraj