விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின்பின்புல அலுவலகம் ஆராய்ந்தது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் விலை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் கிலோவிற்கு ரூ. 30 முதல் ரூ. 35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதி தேவையினாலும் விலை உயர வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு விலையேற வாய்ப்பில்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை உடனே விற்க பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Related Posts

வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு
கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு ஜீலை 27ம் தேதி (நேற்று) கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல்… Read More »வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு

விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி
இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 , 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை… Read More »விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி

தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்
சிலி, அர்ஜென்டினா மற்றும் போல்க் லேண்ட் தீவுகளின் புற்கள் நிறைந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மெகல்லன் வாத்துக்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு மேட்டு நில வாத்து (Upland Goose) என்றொரு பெயரும் உண்டு. இவற்றின்… Read More »தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்