விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின்பின்புல அலுவலகம் ஆராய்ந்தது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் விலை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் கிலோவிற்கு ரூ. 30 முதல் ரூ. 35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதி தேவையினாலும் விலை உயர வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு விலையேற வாய்ப்பில்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை உடனே விற்க பரிந்துரைக்கப்படுகின்றனர்.