வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. ரசாயன உரங்கள் சேர்க்கமால் இயற்கை உரங்களால் வளர்பதால் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரைகள், முட்டைக்கோஸ், வெள்ளரி போன்றவை சாலட் (பச்சடி) செடிகள் வகையில் சேர்க்கப்படிகின்றன. இவற்றில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம். இவற்றில் வீடுகளில் வளர்க்க சிறிய இடம் இருந்தாலே போதும். இந்தசெடிகள் சிறிய அளவிலான வேர்களை மட்டுமே கொண்டிருக்கும். எனவே சின்ன தொட்டி, பாத்திரங்களில் கூட எளிதாக வளர்க்கலாம்.
வெள்ளரிச்செடிகளை வளர்ப்பது சுலபம். அதிக அளவில் உரமோ, அதிக அளவு சூரிய வெளிச்சமோ கூட தேவையில்லை. விதைத்து நன்கு பராமரித்தால் இரண்டரை மாதத்தில் அறுவடை செய்யலாம். வெள்ளரியில் ஆண்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின் ஏ, சி,டி, இ போன்றவை உள்ளன.
முட்டைக்கோசில் உயர்ந்த வைட்டமின் இ,சி, கால்சியம் போன்றவை உள்ளன. தோட்டத்தில் முட்டைக்கோஸ் பயிரிட ஜீன் மாதம் ஏற்ற பருவமாகும். இவற்றோடு புதினா, ரோஸ்மேரி போன்றவற்றையும் பயிரிடலாம்.
கீரைகளில் இரும்புச்சத்து, போலிக்அமிலம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, போன்றவை உள்ளன. வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை வளர்ப்பதன் மூலம் செலவில்லாத ஊட்டசத்து மிக்க காய்கறிகளை அவ்வப்போது பறித்து சமைக்கலாம். இதனால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.